+2 செய்முறை தேர்வு பள்ளிகளில் இன்று தொடக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 16, 2021

+2 செய்முறை தேர்வு பள்ளிகளில் இன்று தொடக்கம்.

 


பிளஸ் 2 மாணவர்களுக்கு, இன்று முதல் செய்முறை தேர்வுகள் துவங்க உள்ளன. கொரோனா பரவல் காரணமாக, நான்கு குழுக்களாக மாணவர்களை பிரித்து, தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.


தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, மே 5ம் தேதி முதல் பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதன் முதற்கட்டமாக, செய்முறை தேர்வுகள் இன்று துவங்குகின்றன. கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி, பல்வேறு வழிகாட்டல்களை பின்பற்றி, செய்முறை தேர்வுகளை நடத்த, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


இதற்கான வழிகாட்டு முறைகளை, அரசு தேர்வுத் துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்டு உள்ளார்.அதன் விபரம்:


* செய்முறை தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்; வெப்ப பரிசோதனைக்கு பின்னரே, அவர்களை ஆய்வகங்களில் அனுமதிக்க வேண்டும்


* ஒரு பிரிவு மாணவர்கள், தேர்வை முடித்து வெளியே வரும் வரை, மற்றொரு பிரிவு மாணவர்கள், காத்திருப்பு அறையில் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும், 4 சதுர மீட்டர் இடம் ஒதுக்க வேண்டும்


* மாணவ - மாணவியர், 'சானிடைசரால்' கைகளை சுத்தம் செய்த பின்னரே, செய்முறை பயிற்சியில் அனுமதிக்கப்பட வேண்டும். சானிடைசர் தீ பற்றும் தன்மை உள்ளதால், அதை ஆய்வகத்தின் பாதுகாப்பான பகுதியில் கையாள வேண்டும்


* முக கவசம், கையுறைகள் அணிவதை பின்பற்ற வேண்டும். செய்முறை தேர்வின் போது, ஆய்வகத்தின் ஜன்னல்கள், வாசல் கதவுகள் திறந்திருக்க வேண்டும்


*ஆய்வகங்களின் அனைத்து பகுதிகளிலும், ஆய்வகக் கருவிகளிலும் செய்முறை தேர்வுக்கு முன், பின், கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும்


* கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தாலோ; தொற்று கண்டறியப்பட்டாலோ, அந்த மாணவர்கள், மற்ற மாணவர்களுடன் தேர்வில் பங்கேற்க அனுமதியில்லை. அவர்களுக்கு வேறொரு நாளில் தனியாக தேர்வு நடத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி