பிளஸ்-2 தேர்வு ஜூலை மாதம் நடத்த திட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 20, 2021

பிளஸ்-2 தேர்வு ஜூலை மாதம் நடத்த திட்டம்

 


பிளஸ்-2 பொதுத்தேர்வு மே மாதம் 3-ந் தேதி தொடங்குவதாக இருந்தது. 2-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவதால் மறுநாள் 3-ந் தேதி நடைபெறுவதாக இருந்த தமிழ் தேர்வு மட்டும் ஒத்திவைக்கப்பட்டது.


5-ந் தேதியில் இருந்து தேர்வு தொடங்குவதாக இருந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருவதால் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைபடி தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


தற்போது செய்முறை தேர்வு மட்டும் நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில் கொரோனா தொற்று பரவலின் தாக்கம் ஜூன் மாதம் வரை அதிகம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதனால் பிளஸ்-2 பொதுத்தேர்வை ஜூன் இறுதி அல்லது ஜூலை மாதம் முதல் வாரத்தில் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.


மே மாதத்திற்குள் பெரும்பாலானவர்களுக்கு தடுப்பூசி போட்டு விடலாம் என்பதால் தொற்றின் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு இல்லை.


அதனால் ஜூலை மாதத்திற்குள் தேர்வுகளை நடத்தி முடித்து விட அரசு தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. தேர்விற்கு அதிக கால இடைவெளி கொடுக்காமல் தேவையான அளவு மட்டும் கொடுத்து தேர்வை நடத்திடவும் அதனை தொடர்ந்து 2 வாரத்தில் தேர்வு முடிவை வெளியிடவும் உத்தரவிட்டுள்ளது.


கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு நடந்து முடிந்த பிறகு தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.


அதனால் வினாத்தாள் தாமதமாக திருத்தப்பட்டு தேர்வு முடிவும் தாமதமாக வெளியானது.


ஆனால் இந்த வருடம் தேர்வு 3 மாதங்கள் தள்ளி போகிறது. முடிவு வருவதற்கு மேலும் 2 மாதம் ஆகும். மேலும் செய்முறை தேர்வு மாணவர்கள் தவிர பிற மாணவ-மாணவிகள் வகுப்புக்கு வரத்தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது அனைத்து வகுப்பு மாணவர்களும் வீட்டில் முடங்கி இருக்கிறார்கள்.

8 comments:

  1. எப்படியோ நாடகத்தை ஜூனுக்குள் முடிக்க பாக்குறீங்க சந்தோசம்

    ReplyDelete
  2. Plus two all pass nu solli mudinga

    ReplyDelete
  3. எனக்கு M G R அவர்களின் பாட்டு ஒன்று நினைவுக்கு வருகிறது......இதை எல்லாம் பார்க்கும்போது.

    ReplyDelete
    Replies
    1. தி௫டனா பாத்து தி௫ந்தாவிட்டால் தினத்தில் முடியாது

      Delete
  4. Yennnathan nadakum nadakatumey

    ReplyDelete
  5. Kalviseithi la விளம்பரம் அதிகமாக வருது நியூஸ் .... குறைவாக வருது.....

    ReplyDelete
  6. ஜூலைக்கு மேல் நீங்கள் ஆட்சியில் இருக்கப் போவதில்லை. அடுத்து வருகிற திமுக வாவது முதுகெலும்புடன் நடந்து கொள்ளமா? அல்லது நீங்கள் பாடுகிற அதே பல்லவியைப் பாடுமா ?

    தேர்வு ரத்து என்பதை ஏதோ சமூக சீர்திருத்தம் போலவும், புதுமைப் புரட்சி போலவும் எண்ணிக் கொண்டு ஆட்சி நடத்தும் தலைவர்கள் உள்ளவரை நாடு உருப்படாது.

    மீடியாக்களுக்கு பயந்து, மத்திய அரசைக் கண்டு பயந்து, கொரோனாவைக்கண்டு பயந்து செத்து, இப்படி தொட்டதற்கெல்லாம் பயந்து சாகிறவர்கள் தலைமையில் ஆட்சி நடந்தால் நாடு குட்டிச்சுவராவது உறுதி. அடுத்து வரும் திமுக வும் இதையே செய்தால் நாட்டில் சுதந்திரப் புரட்சி வெடித்தது போல, வாழ்வாதாரப் புரட்சி வெடிப்பது திண்ணம். கொத்து கொத்தாக மக்கள் வீதியில் இறங்கிப் போராடும் நாள் வெகு தொலைவில் இல்லை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி