BEO EXAM - தமிழகத்தில் வட்டாரக் கல்வி அதிகாரி தேர்வுப் பட்டியல் எப்போது வெளியாகும்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 19, 2021

BEO EXAM - தமிழகத்தில் வட்டாரக் கல்வி அதிகாரி தேர்வுப் பட்டியல் எப்போது வெளியாகும்?

 


வட்டாரக் கல்வி அதிகாரி தேர்வு முடிவுகளுக்காக 42,000 பி.எட். பட்டதாரிகள் ஓராண்டுக்கு மேலாக காத்திருக்கின்றனர்.

தமிழக அரசின் தொடக்கக் கல்வி சார்நிலைப் பணியில் 97 வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களை நேரடியாக நிரப்பும் வகையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம்தேதி முதல் 16-ம் தேதி வரைஇணையவழியில் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.


ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தேர்வில், தமிழகம் முழுவதும் 42,686 பி.எட். பட்டதாரிகள் பங்கேற்றனர். தேர்வு முடிந்த 5-வது நாளில் உத்தேச விடைகள் (கீ ஆன்சர்) இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

அதற்குப் பிறகு 11 மாதங் கள் கழித்து, அனைத்து தேர்வர் களின் மதிப்பெண்களும் இணைய தளத்தில் வெளியாகின.

பொதுவாக ஒரு தேர்வில் மதிப்பெண் பட்டியல் வெளியிடப் பட்டு, அடுத்த சில நாட்களில் இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுவிடும். ஆனால், வட்டாரக் கல்வி அதிகாரி தேர்வில் மதிப்பெண் பட்டியல் வெளியிட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாகி யும், இன்னும் இறுதிப் பட்டியல் வெளியிடப்படவில்லை.

நிறைவேறாத நோக்கம்

இணையவழி தேர்வு நடத்தப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படாததால், தேர்வர்கள் ஏமாற்றம்அடைந்துள்ளனர். இணையவழியில் தேர்வு நடத்தப்படுவதன் நோக்கமே, தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட வேண்டும் என்பதுதான்.

தேர்வு எழுதியவர்கள் அதிருப்தி

ஆனால், வெறும் 42,686 பேர் பங்கேற்ற இணையவழித் தேர்வின் இறுதிப் பட்டியலை ஓராண்டாகியும் இன்னும் வெளியிடப்படாதது, ஆசிரியர் தேர்வுவாரியம் மீது தேர்வு எழுதியவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, "இனியும் காலதாமதம் செய்யாமல், வட்டாரக் கல்வி அதிகாரி இறுதி தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளி யிட வேண்டும்" என்று தேர்வர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

7 comments:

  1. ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைத்து விட்டு எம்பிளாயிமென்ட் சீனியாரிட்டி படி அனைத்து நிலையில் உள்ள ஆசிரியர்களையும் நிரப்ப வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. Worst department trb , I don't know they are well educated or primitive people, cannot complete single exam without problems,

      Delete
  2. 10.5 இடஒதிக்கீட்டு அடிப்படையில் நிப்பப்படும்

    ReplyDelete
  3. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள் என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அவர்களுக்கு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்

    ReplyDelete
  4. Free pgtrb maths vedio

    And psychology ,g.k.,vedio visit youtube channel

    AKBAR MATHS ACADEMY

    ReplyDelete
  5. காங்கேயம் முத்தூர் வெள்ளகோயில் இங்கு உள்ள வேதியியல் ஆசிரியர்கள் யாரேனும் திருப்பூருக்கு விருப்ப மாறுதல் வேண்டுமெனில் தயவுசெய்து இந்த செய்திக்கு பின்னூட்டம் தரவும் நன்றி..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி