தேர்தல் கமிஷன் காதுகளுக்கு எட்டுமா? தேர்தல் பணி ஆசிரியர்கள் குமுறல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 1, 2021

தேர்தல் கமிஷன் காதுகளுக்கு எட்டுமா? தேர்தல் பணி ஆசிரியர்கள் குமுறல்!

 


ஓட்டுச் சாவடி பணிக்குச் செல்லும் ஆசிரியர்கள் மத்தியில் தற்போது ஒரு பதிவு, சமூக வலை தளங்களில் உலா வருகிறது.'வணக்கத்திற்குரிய தலைமைத் தேர்தல் கமிஷனர் அவர்களுக்கு இந்தப் பாவப்பட்ட ஆசிரியர் சமூகத்தையும் சற்று நீங்கள் கவனித்தால் என்ன' என்று இந்த பதிவு துவங்குகிறது.


இப்பதிவில் உள்ள சாராம்சம்:

* தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர் பட்டியலை, முதலிலேயே பெற்றாலும், பணியாணை, தேர்தலுக்கு ஒருநாள் முன் தான் வழங்கப்படுகிறது. தேர்தல் பயிற்சி வழங்கும் முதல் நாளிலேயே அந்தப் பணியிட ஆணையை வழங்குவதற்கு, இன்றைய தொழில் நுட்பத்தில் சாத்தியமில்லையா!

*ஒரு ஆசிரியர், தான் பணியாற்றுகிற இடத்திற்கு அருகில் உள்ள ஓட்டுச் சாவடியில் பணியாற்றினால் என்ன நடந்து விடும்? வேட்பாளருக்குச் சாதகமாக செயல்பட்டுவிடுவாரா? நம்பிக்கையில்லாதவரை அப்பணிக்கு ஏன் அமர்த்த வேண்டும்? நம்பிக்கையான வேறு பணியாளரை பயன்படுத்திக் கொள்ளலாமே!


* ஏஜன்ட்கள் கண் கொத்திப் பாம்பாய் இருக்கிறார்கள். மேலும், எல்லா ஓட்டு சாவடியிலும் கண்காணிப்புக் கேமராக்களோடு கல்லுாரி மாணவர்கள் உள்ளனர். எங்கே தவறு ஏற்படும்?


* ஆசிரியர்களில், மாற்றுத் திறனாளிகள், சர்க்கரை நோயாளிகள், இருதய நோயாளிகள் பாலுாட்டும் தாய்மார்கள் என யாருமே இல்லையா. அவர்களை முன்னரே கண்டறிந்து தேர்தல் பணியிலிருந்து சற்று விலக்கி வைப்பதில் என்ன பிரச்னை? அவர்களை முதலிலேயே இனம் கண்டு கொள்ளும் வகையில் எந்த நடவடிக்கையும் இல்லை.


* பெண் ஆசிரியைகள் பணியாற்ற செல்லும் இடத்திற்கு பயண வசதி இருக்கிறதா! அங்கு அவர்களுக்கு தங்கும் வசதி, அடிப்படைக் கழிப்பிட வசதிதான் இருக்கிறதா!


* ஓட்டுச் சாவடி அலுவலர்களுக்கு, உணவுக்கு எந்த ஏற்பாடும் செய்வதில்லை.


* தேர்தல் நடத்திய அலுவலர்கள், மண்டல அலுவலர்களை அழைத்து தேர்தலை நடத்துவதில் உள்ள சிரமங்கள் பற்றி கருத்து கேட்டு, அடுத்த தேர்தல்களில் அவற்றைக்களைய வேண்டும். நடைமுறைச் சிக்கல்கள் அப்போதுதான் அறிய முடியும்.


*ஓட்டுப் பதிவு முடிந்தும், அந்த ஓட்டுப் பதிவு இயந்திரங்களைப் பெற நள்ளிரவு வரையும் சில இடங்களில் அடுத்த நாளும் ஆகி விடுகிறது. பெண் ஆசிரியைகள் அந்த நள்ளிரவில், தங்கள் வீடுகளுக்கு திரும்ப எந்த வசதியும் இல்லை. அதிகாரிகளுக்கு இது குறித்து அக்கறையும் இல்லை.


* பாதுகாப்பு பணிக்கு வரும் பெண் போலீசார் நிலை அதை விட மோசம். மூன்று நாள் அங்கேயே குடியிருக்கும் பெண் காவலர்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது.இவ்வாறு, குமுறல்களாக தொடர்கிறது இந்தப்பதிவு. 'தேர்தல் கமிஷன் காதுகளுக்கு இது எட்ட வேண்டும்' என்கிறார்கள் ஆசிரியர்கள்.

6 comments:

  1. ஏற்கனவே மத்திய அரசின் வழிகாட்டுதல்களால் பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. அதிமுக அரசு தற்போது ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59-ஆக மாற்றி தற்போது சிறப்பாக 60 ஆக மாற்றியுள்ளார்கள். யாருமே பி.எட் படித்துவிட்டு காத்திருக்கவும் இல்லை. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று 7 ஆண்டுகளாக காத்திருக்கவும் இல்லை. அதனால் தான் 58 வயதை 60 ஆக மாற்றி படித்தவர்களின் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல் பணிக்குச் செல்லும் வயதை 40 ஆகக் குறைத்திருக்கிறார்கள். 40 வயதிற்கும் மேல் யாரும் ஆசிரியர் பணிக்கு வந்துவிடக் கூடாது என்று சிறப்பான அறிவிப்பை அதிமுக ஆட்சியில் கொண்டு வந்து அவர்களின் வயிற்றிலும் பாலை வார்த்திருக்கிறார்கள். 7 ஆண்டுகளாக தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றும் வேலைக்குச் செல்ல முடியவில்லை. வாழ்க தமிழ்நாடு...

    ReplyDelete
  2. மோடி தாடியும் எ டப்பாடியும் படித்து முன்னுக்கு வந்தவர்கள் அல்ல. அரசியல் பாடத்தை படித்து பட்டம் பெற்றவர்கள் அல்ல. ஜனநாயகம் என்ற பெயரில் படிப்பறிவு இல்லாதவர்களைக் கொண்டு படித்தவர்களை ஆளுகின்ற கேவலமான ஆட்சி.இனி விடிவு காலம் கடவுள் கையில்.

    ReplyDelete
  3. அரசுப் பணியை அர்ப்பணிப்பு உணர்வு உள்ளவர்களால் மட்டுமே செய்ய முடியும்.
    பள்ளியில் குடும்பக் கதை பேசும் போதும், புறணி பேசும் போதும், அடுத்தவரோடு கும்மியடிக்கும் போதும், அண்டா வாயை பிளந்து பல்லைக் காட்டும் போதும் இருக்கும் மனவலிமையானது வேலை பார்க்கும் போது ஏன் வர மறுக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வெயில் அதிக‌ரித்து விட்ட‌தால் ம‌ன‌நோய் முற்றி விட்ட‌து போல‌...ந‌ல்ல‌ ம‌ன‌ந‌ல‌ ம‌ருத்துவ‌ ஆலோச‌க‌ரைச் சென்று பார்க்க‌வும்..

      Delete
    2. நீ பேய் பாரு....

      Delete
  4. உலக மகா ilichchavaayargal
    ஆசிரியர்கள் மட்டுமே,
    பெண் ஆசிரியர்களுக்கு,
    தேர்தல் பணி 150 கிலோமீட்டர் தொலைவில்,
    நீதிமன்றத்தை அணுகி,
    நல்லதோர் தீர்வு காண வேண்டும்.
    Election முடிந்த மறுநாள்
    இதை எல்லாம்
    Maranthuviduvathu
    சரியாகாது,

    தேர்தல் பயிற்சி வகுப்பு
    தொடங்கி,
    தேர்தல் பணி முடியும்
    வரை செலவு மட்டுமே ஒரு நபருக்கு

    5000 ரூபாய் ஆகிறது,
    ஆனால் 1300 ரூபாய் மட்டுமே
    ஆசிரியர்களுக்கு
    வழங்கப்படுகிறது,
    அதே பணி யினை
    25 நாட்கள் செய்யும்
    வருவாய் துறையினருக்கு
    கூடுதலாக ஒரு மாத ஊதியம்
    வரை வழங்கப்படுகிறது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி