புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதி - kalviseithi

Apr 20, 2021

புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதி

 

அண்ணா பல்கலையின் வளாக கல்லுாரி மாணவர்களுக்கு புத்தகத்தை பார்த்துசெமஸ்டர் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பிரச்னை காரணமாக ஒரு முறை மட்டும் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்களுக்கு வீட்டில் இருந்தே தேர்வு எழுதும் முறை அமலில் உள்ளது.இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட 'சாப்ட்வேர்' வழியாக 'ஆன்லைனில்' இந்த தேர்வு நடத்தப்படுகிறது.


கல்விச்செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணையுங்கள் Kalviseithi Telegram Group 


👉 https://t.me/kalviseithiofficial

ஒரு முறை


இந்நிலையில் தன்னாட்சி கல்லுாரிகளாக இயங்கும் அண்ணா பல்கலையின் சென்னை வளாக கல்லுாரிகளுக்கு மட்டும் புத்தகத்தை பார்த்து எழுதும் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை கிண்டி இன்ஜி. கல்லுாரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லுாரி, திட்டமிடல் மற்றும் கட்டட அமைப்பியல் கல்லுாரி மற்றும் குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லுாரி ஆகியவற்றின் மாணவர்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது.கொரோனா பரவலால் ஒரு முறை சலுகையாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உயர் கல்வித் துறை முதன்மை செயலர் அபூர்வா தலைமையிலான கமிட்டியில் இதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டு மாணவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.இது குறித்து அண்ணா பல்கலையின் அகாடமிக் இயக்குனரக சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:அரசின் அறிவிப்பின்படி இந்த ஆண்டுக்கான டிசம்பர் மற்றும் மே மாத தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும்.


நுண்ணறிவுத்திறன்


இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்பு மாணவர்களில் இறுதி ஆண்டில் இறுதி செமஸ்டர் தவிர மற்ற மாணவர்களுக்கு ஆன்லைனில் புத்தகத்தை பார்த்து எழுதும் தேர்வு நடத்தப்பட்டுள்ளது.இதில் 'அ' பிரிவில் தலா இரண்டு மதிப்பெண்கள் வீதம் ஐந்து கேள்விகள் இடம் பெறும். 'ஆ' பிரிவில் தலா எட்டு மதிப்பெண்கள் வீதம் ஐந்து கேள்விகள் இடம் பெறும். இது புத்தகத்தை பார்த்து ஆய்வு செய்து எழுதும் தேர்வு. விடைகளை விளக்கமாக எழுதும் முறை.

இதில் மாணவர்களின் நுண்ணறிவு திறனை தெரிந்து கொள்ளும் வகையில் பகுப்பாய்வு வினாக்கள் அமையும். புத்தகத்தில் இருந்து நேரடியாக விடைகளை எடுத்து எழுதும் வகையில் வினாக்கள் இருக்காது.


90 நிமிடம்


மாணவர்கள் ஆன்லைன் தேர்வு எழுதும் போது புத்தகம் மற்றும் விளக்க புத்தகங்களை பார்த்துக் கொள்ளலாம்; ஆன்லைனிலும் தேடி எடுக்கலாம். மாறாக குழுவாக அமர்ந்தோ 'வீடியோ' வழியாகவோ பேசி விடைகளை எழுதினால் அது முறைகேடாககணக்கில் எடுக்கப்படும்.தேர்வு முடிந்ததும் அதை தாமதமின்றி 'ஸ்கேன்' செய்து ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும். இந்த தேர்வுக்கு 50 மதிப்பெண்களுக்கு 90 நிமிடம் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


இறுதி செமஸ்டர் தேர்வு


அண்ணா பல்கலையின் வளாக கல்லுாரி மாணவர்களில், இறுதி ஆண்டு இறுதி செமஸ்டர் தேர்வு எழுதுபவர்களுக்கு, சரியான விடையை தேர்வு செய்யும் வகையில் வினாத்தாள் அமையும். இது, புத்தகத்தை பார்த்து எழுதும் தேர்வு கிடையாது; ஆன்லைனில் எழுதும் தேர்வாகும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

1 comment:

  1. அடுத்து, " வாட்சப்பில் ஷேர் பண்ணி , அதை Copy Paste செய்து தேர்வு எழுத அனுமதி" ன்னு ஒன்னை அறிவியுங்கடா......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி