மீண்டும் விரட்டும் கொரோனா மாணவர்களின் கல்வி என்ன ஆகும்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 18, 2021

மீண்டும் விரட்டும் கொரோனா மாணவர்களின் கல்வி என்ன ஆகும்?

 


கடந்த ஓராண்டுக்கும் மேலாக உலகையே புரட்டிப் போட்டுவரும் கொரோனாவால் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வேலைவாய்ப்பின்மை, பொருளாதார நெருக்கடி உள்ளிட்டவைகளில் இருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. இதேபோல், கல்வித்துறையும் பெரும் சவாலை சந்தித்து வருகிறது. மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கத்தால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டது. மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்காத வகையில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆன்லைன் கல்வி நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழக அரசின் திடீர் ஆன்லைன் கல்வி திட்டத்தால் கிராமப்புற மாணவர்கள் பெரும் சவாலை சந்தித்தனர். ஆன்ட்ராய்டு செல்போனும், இணைய வசதியும் இல்லாத மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டனர். 

 

ஒருபுறம் மாணவர்கள் பெரும் பாதிப்பை சந்தித்தாலும் மறுபுறம் ஆன்லைன் கல்வி என்பது ஒரு ஒப்புக்கு நடத்துவது போன்று தான் இருந்தது. ஆன்லைன் கல்வியால் மாணவர்களின் நலன், கல்வியறிவு, சிந்திக்கும் திறன், உடல்நலன் ஆகியவை பாதிக்கப்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். ஆன்லைன் கல்வி முறையானது அரசுப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இடையே ஒரு பாகுபாட்டையும் ஏற்படுத்துவதாக இருந்தது. கொரோனா கொடுங்காலத்தில் உணவிற்கே வழி இல்லாமல் திண்டாடிய பெற்றோர்களிடம் தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணம் செலுத்தக்கோரி வற்புறுத்தியதையும் கடந்த ஆண்டு காண முடிந்தது. இதனால், பல லட்சக்கணக்கான மாணவர்களை அவர்களின் பெற்றோர்கள் அரசு பள்ளிகளுக்கு மாற்றினர். இந்நிலையில், கட்டாய ஆன்லைன் கல்வி என்ற நடைமுறையை தமிழக அரசு மாற்றியது. இதேபோல், ஆன்லைன் கல்வி முறையே தவறு என்றும் கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சரிவர திட்டமிடப்படாத ஆன்லைன் கல்வி முறையால் 90 சதவீத மாணவர்களுக்கு தான் என்ன படித்தோம் என்பதே மறந்துவிட்டது.


கொரோனா பாதிப்பு குறைந்து வந்தபோது 2021 ஜனவரி 19ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. ஆனால் தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகளை மூட கடந்த மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. இதேபோல், அடுத்த கல்வியாண்டிலும் ஆன்லைன் வழிக்கல்வியே நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பினால் தனியார் பள்ளிகள் மீண்டும் பெற்றோர்களிடம் ஆன்லைன் கல்வி கட்டணத்தை வசூலிக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக, 6 மாதம் மற்றும் ஓராண்டு கல்விக்கட்டணத்தை முன்கூட்டியே செலுத்த கூறியுள்ளதாக பெற்றோர்கள் புகார்கள் தெரிவித்துள்ளனர். 


ஆன்லைன் கல்வியால் மாணவர்கள் மன அழுத்தம், கண் பார்வை பாதிப்பு, உடல்நலக்கோளாறு போன்ற பிரச்னைகளை தொடர்ந்து சந்தித்து வரும் நிலையில் மீண்டும் ஆன்லைன் கல்வி என்பது மாணவர்களின் கல்வி அறிவை கேள்விக்குறியாக்கி விடும் என சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, கல்வியாளர் முருகையன் பக்கிரிசாமி கூறியதாவது: தனியார் கல்வி நிறுவனங்கள் பெற்றோர்களிடம் இருந்து பணம் வசூலிக்க கண்டுபிடித்ததுதான் ஆன்லைன் வழிக்கல்வி. இதை அரசு ஆதரித்தது. ஆன்லைன் கல்வி முறை அனைவருக்கும் சென்றடையாது என ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். குக்கிராமங்களில் மின்சாரம், இணையதள வசதி என்பது கிடையாது. கடந்த ஆண்டு எத்தனையோ மாணவர்கள் செல்போன் வசதி இல்லாததால் தற்கொலை செய்துகொண்டதை காண முடிந்தது. 

 

24 மணி நேரம் மின்சாரமும் இருப்பதில்லை. இதனாலும் கல்வி தொலைக்காட்சியும் மாணவர்களிடம் சென்று சேரவில்லை. கல்வித் தொலைக்காட்சி மாணவர்களிடம் சரிவர சென்றடையவில்லை என்பதை முதல்வரே சட்டப்பேரவையில் ஒப்புக்கொண்டார். 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு எப்படி மதிப்பெண் போடப்போகிறோம் என்று இதுவரையில் அரசு தெரிவிக்கவில்லை. கல்வித்துறை என்பது கல்வி குழப்ப துறையாகத்தான் இருக்கிறது. ஆன்லைன் வழி கல்வியால் மாணவர்களின் தலையில் கத்தி தொங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மாணவர்களின் எதிர்காலம் என்பது கேள்விக்குறியாக்கப்பட்டு விட்டது. மொத்தம் 1.6 கோடி மாணவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். இவர்களில் 20 சதவீதம் பேருக்கு கூட ஆன்லைன் வழிக்கல்வி சென்றடையவில்லை. உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மாணவர்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாவார்கள். தொடர் ஆன்லைன் வழிக்கல்வி மூலம் மாணவர்களின் கண் பார்வை பாதிக்கப்படும் ஆன்லைன் தேர்வு மூலம் ஒரு நம்பிக்கை ஏற்படாது. மாணவர்களின் அடிப்படை கல்வி அறிவை இது மிகவும் பாதிக்கும்.


அனைத்து மாணவர்களுக்கும் டிஜிட்டல் சேவை என்பது சென்றடையாமல் ஆன்லைன் வழிக்கல்வியால் பயனில்லை. பெரும்பாலான மாணவர்கள் பெற்றோர்களுடன் சேர்ந்து வேலைக்கும் செல்கின்றனர். டிஜிட்டல் சேவையை வலுப்படுத்தும் வரையில் ஆன்லைன் கல்வி முறை என்பது பலனளிக்காது. பல பள்ளிகளில் கழிவறை இல்லை. சுத்தமான தண்ணீர் இல்லை. எனவே, இதை எல்லாம் சரிசெய்த பிறகும், கொரோனா தாக்கம் குறைந்த பிறகுதான் பள்ளிகளை தொடங்க வேண்டும். ஆன்லைன் வகுப்புகளுக்கு பதிலாக கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி ஆசிரியர்களே மாணவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று பாடம் நடத்த வேண்டும். வழக்கமான நடைமுறையை பின்பற்றாமல் ஆரம்ப கல்வி கூடங்களில் அந்த பகுதி மாணவர்களை அழைத்து பாடம் நடத்த வேண்டும். தன்னார்வலர்கள், சமூக பணியாளர்கள் ஆகியோரை இப்பணியில் ஈடுபடுத்த வேண்டும். குறிப்பாக, ஆன்லைன் வகுப்பில் இருக்கும் மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக ஆலோசனை கொடுக்க வேண்டும். உடற்பயிற்சியும் மிகவும் அவசியம். இதுகுறித்து, கல்வியாளர்களுடன் அரசு ஆலோசனை நடத்தி வரும் கல்வியாண்டுக்கு சரியான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு அறிவிக்க வேண்டும். 


11% பேர் மட்டுமே...

கடந்த ஆண்டு ‘அசெர்’ நடத்திய ஆய்வுப்படி, இந்திய மாணவர்களில் 32.5 சதவீதம் பேர் தான் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்றுள்ளனர். அதிலும் 11 சதவீதம் மாணவர்கள் மட்டுமே நேரடியான ஆன்லைன் வகுப்புகளில் தினம்தோறும் பங்கேற்றுள்ளனர். 21.5 சதவீதம் மாணவர்கள் வீடியோ அல்லது பதிவு செய்யப்பட்ட வகுப்புகள் மூலமே படித்துள்ளனர். 

உளவியல் ஆலோசனை அவசியம் ஆன்லைன் வழிக்கல்வியால் ஆசிரியர்-மாணவர் தொடர்பு என்பது இல்லாமல் போய்விட்டது. இதனால், கல்வி ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக ஆலோசனை தேவைப்படுகிறது. இதனால், சிறப்பு மையங்களை ஏற்படுத்தி அவர்களுக்கு மருத்துவர்கள் மூலம் உளவியல் ஆலோசனை கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கணிதம், அறிவியல் பாடங்கள் கற்பதில் சிக்கல்

ஆன்லைன் மூலம் கணிதம், அறிவியல் ஆகிய பாடங்கள் கற்றுக்கொள்வதில் கடினம் மிகுந்தவையாக இருப்பதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். உரையாடல் மற்றும் தொடர் கவனிப்பு மூலமாக கணித பாடத்தை புரிந்து கொள்ள முடியும். ஆனால், ஆன்லைன் வகுப்பால் இது தடைபடுகிறது. 

ஆன்லைன் கல்வி கைகொடுக்கவில்லை

ஆன்லைன் கல்வி மாணவர்களுக்கு பலனை கொடுத்ததா இல்லை மன அழுத்தத்தை கொடுத்ததா என்பது குறித்து பல்வேறு கள ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இவற்றில் பெரும்பாலான ஆய்வுகளில் சரியாக திட்டமிடப்படாத மற்றும் வரையறுக்கப்படாத ஆன்லைன் கல்விமுறை மாணவர்களுக்கு கைகொடுக்கவில்லை என்பதே பதிலாக இருக்கிறது. 


தினக்கூலியாக மாறிய மாணவர்கள்

நகர்ப்புறங்களில் வசிக்கும் மாணவர்களுக்கே ஆன்லைன் கல்விமுறை இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது. இந்தசூழலில் கிராமப்புறங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி என்பது எட்டாக்கனியாக உள்ளது. இணையதளம், மின்சாரம், கைப்பேசி உள்ளிட்ட எந்த வசதியும் கிடைக்காத மாணவர்கள் படிப்பு என்பதையே மறந்துவிட்டனர். டிவி மூலம் நடத்தப்படும் வகுப்புகளையும் அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் தினக்கூலிகளாக பணிசெய்து வருவதாகவும் கூறப்படுகிறது.


தனியார் பள்ளிகள் கட்டாய பணம் வசூலிப்பு

ஆன்லைன் வழிக்கல்வி மூலம் மாணவர்களுக்கு வீட்டில் இருந்தவாறு தான் பாடம் நடத்தப்படுகிறது. ஆனால், பெரும்பாலான தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும் மாணவர்களிடம் இருந்து கட்டண கொள்ளை நடத்துவதாக புகார் எழுந்துள்ளது. மாணவர்கள் பயன்படுத்தாத வேதியியல் ஆய்வு வகுப்பறை, நூலகம், கணினி ஆய்வு வகுப்பறை ஆகியற்றையும் சேர்த்து கட்டணத்தில் பணம் வாங்குவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கண் பாதிப்பு

கடந்த ஓராண்டுக்கு மேலும் மாணவர்கள் ஆன்லைன் வழிக்கல்வியை கற்று வருகின்றனர். இதனால், 40 சதவீதம் மாணவர்களுக்கு கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு முதல் முதியவர்கள், இளம் வயதினர், பெண்களை காட்டிலும் பள்ளி மாணவர்கள்தான் கண் மருத்துவமனைகளுக்கு பரிசோதனைக்கு செல்வதாகவும் கூறப்படுகிறது.

11 comments:

  1. Muthalil makkalin varumaanathiruku oru vazhi sollungal. Velaiyillaathavargaluku govt job kudupathil oruvaruku kodungal. Athuve ellaa problem um solve aagidum. Manavargal kalvi engum poga porathu illa. Padithu pattam petravargaluku mukkiyathuvam kodungal

    ReplyDelete
  2. Vithipadi and nerathin padi nadakum. Innum panakaargal and arasiyal vathigal puriyavillai endraal innum pala izhapukal neridum. Ulagam azhivai nokki sellum.

    ReplyDelete
  3. Avaravar paditha padipiruku velaivaaipu vazhanganum.. Ivlo valam irunthum.. Athu oru silaruku matume sergirathu. Kodi kodiyaai vaithukondu irupavargal makkaluku uthava munvaarungal. Athigaarathil irupavargal manathaneyamaga nadanthukondu padithavarku atleast employment moolama velaivaaipu thaarungal

    ReplyDelete
  4. முருகையன் பக்கிரிசாமி அவர்களே தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்கவே ஆன்லைன் வழி கல்வி என்று சொல்கிறேர்களே அப்படியெனில் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு குடும்பம் உண்டு என்பதை எண்ணித்தான் சொல்கிறீர்களா....... நீங்கள் அரசு ஆசிரியரா என்று தெரியாது ஒருவேளை இருந்து ஒரு மாதம் ஊதியம் இல்லை என்று சொன்னால் கொரோனா என்றும் பார்க்காமல் போராட்டம் நடத்தி இருப்பீர்கள்................

    ReplyDelete
  5. முருகையன் பக்கிரிசாமி அவர்களே தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்கவே ஆன்லைன் வழி கல்வி என்று சொல்கிறேர்களே அப்படியெனில் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு குடும்பம் உண்டு என்பதை எண்ணித்தான் சொல்கிறீர்களா....... நீங்கள் அரசு ஆசிரியரா என்று தெரியாது ஒருவேளை இருந்து ஒரு மாதம் ஊதியம் இல்லை என்று சொன்னால் கொரோனா என்றும் பார்க்காமல் போராட்டம் நடத்தி இருப்பீர்கள்................

    ReplyDelete
  6. Intha ADMK government idukara varaikum entha oru government posting um poda maatanunga... BJP+ADMK vantha tamilnadu people's pichcha thaan edukanum...

    ReplyDelete
  7. DMK vanthaal ethaavathu nallathu pandraangala nu paarpom..

    ReplyDelete
  8. Last 8 years ah oru BT and Sgt teachers posting kuda podatha government intha ADMK government...

    ReplyDelete
  9. தனியார் பள்ளிகள் கட்டணம் வசூல் என்று பொத்தாம் பொதுவாக சொல்கிறீர்களே, அதில் பணிபுரியும் பல இலட்சம் ஆசிரியர் குடும்பங்களை எண்ணிப்பார்த்திருந்தால் இப்படி பொறுப்பற்று சொல்ல மாட்டீர்கள். தினக்கூலிகளாக மாறியது மாணவர்கள் மட்டுமல்ல, பல தனியார்ப் பள்ளி ஆசிரியர்களும்தான். உங்களைப் போன்ற பொறுப்பற்ற கல்வியாளர்கள் தனியார்ப் பள்ளிகள் மீது முன்வைக்கும் பொத்தாம் பொதுவான கருத்துக்களால் தனியார் பள்ளிகள் மீதான அரசின் ெடுபிடிகள் அதிகரிக்கின்றன, பல ெற்றோர்கள் காலாண்டு கட்டணம் கூட செலுத்துவதில்லை என்பதே நடைமுறை உண்மை. அரசுப்பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புக்கள் நடைபெறுவது இல்லை. வாட்ஸ் அப்பில் சும்மா பாடங்களை ஷேர் செய்வதோடு ஆசிரியரின் கடமை முடிந்து விடுகிறது. தனியார் பள்ளிகளில் அப்படி இல்லை. பள்ளி திறந்தால் பாடவேளைகள் எப்படி நடைபெறுமோ அப்படியே நடக்கின்றன. அப்படி முறையாக நடந்தும் எந்தப் பெற்றோரும் கட்டணம் செலுத்துவதில்லை. பொத்தாம் பொதுவாக பொதுவாக கருத்துக்களை உதிர்க்கும் உங்களைப் போன்ற கல்வியாளர்களின் கருத்துக்களால்தான் பல தனியார்ப் பள்ளி ஆசிரியர்கள் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

    மாணவர்களின் இருப்பிடத்திற்கே சென்று கல்வி போதிக்க சொல்கிறீர்கள் , எத்தனை ஆசிரியர்கள் எத்தனை மாணவர்கள் வீடுகளுக்குச் சென்று எத்தனை நாட்களுக்கு கல்வி போதிப்பது ? அதன் நடைமுறைச் சாத்தியம் என்ன என்பது குறித்து எள்ளளவும் சிந்திப்பது இல்லை. இதற்கு பதிலாக மாணவர்களை சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவழைத்து பாடங்களை நடத்தலாமே, ஏன் பயந்து சாகிறீர்கள் ? தகுந்த பாதுகாப்பு நெறிமுறைகளைக் ையாண்டு பள்ளிகளிலேயே கல்வி ேதிக்கலாம். ஏன் இவ்வளவு காலம் +2 மாணவர்கள் பள்ளிக்கு வந்து கொண்டுதானே இருக்கிறார்கள். நீங்கள் ஒரு புள்ளி விபரம் எடுத்துப் பாருங்கள், கடந்த ஆண்டு கல்விச் ெயல்பாடுகள் ஏதுமின்றி விளையாடச் சென்று குளம் குட்டைகளில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்ைகை எத்தனை, கொரோனா வந்து உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்ைகை எத்தனை என்று. கல்விச் செயல்பாடுகள் ஏதுமின்றி ஊர் சுற்றி, அலைபேசியில் கேம் விளையாடி, இப்படி பல மாணவர்கள் உயிரிழந்ததுதான் அதிகம். இதற்கு உங்களைப் போன்ற கல்வியாள்களும், உங்கள் கருத்தை அப்படியே ஏற்றுச் ெயல்படுத்தும் அறிவு கெட்ட அரசாங்கமும் தான் பொறுப்பேற்க வேண்டும்.

    தஞ்சாவூரில் பரவியதற்கு சம்பந்தப்பட்ட அரசுப் பள்ளியின் மெத்தனமே காரணம். இந்த ஒரு அற்ப முன்னுதாரணத்தை எடுத்துக் கொண்டு பள்ளிகளை மூடுங்கள், பள்ளிகளை மூடுங்கள், தேர்வுகளை ரத்து செய்யுங்கள் என்று குரல் கொடுப்பது ேனத்தனமான ஒன்று.

    பாதுகாப்பு முறைகளை வலிமைப்படுத்த துப்பில்லாதவர்கள் தான் பள்ளிகளை மூடவும் , ேர்வுகளை ரத்து செய்யவும் ெய்வார்கள். இந்தத் துப்பு கெட்ட அரசு உள்ளவரை இப்படித்தான் இருக்கும்.

    கல்வி முற்றிலும் ஒழிந்து பழைய கற்காலத்தை நோக்கி இச்சமூகம் நகரும். மேலும் கல்விச் செயல்பாடுகள் ஏதுமில்லாததால் நாட்டில் சிறார் குற்றங்கள் பெருகும். மாணவர்களுக்கு நல்லது சொல்லி திருத்த வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. ஆனால் இந்த அரசு என்ன ெய்கிறது, மாணவர்களின் ஆசைகளுக்கு தூபம் போடுவது போன்று விடுமுறை, தேர்வு ரத்து போன்ற கவர்ச்சி அறிவிப்புகளை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக அறிவித்துக் கொண்டே இருக்கிறது.

    நீரிழிவு நோய் வந்தவர்களுக்கு தினமும் ஒரு ஜாங்கிரி, ேளைக்கு ஒரு மைசூர் பாடு என்று அறிவிப்பது போலத்தான், மாணவர்களுக்கு விடுமுறை விடுவதும், தேர்வு ரத்து என்று அறிவிப்பதும்.

    இது மெல்லக் கொல்லும் விஷம் என்பதை இனிவரும் அரசாவது புரிந்து நடக்குமா ? இல்லை அதுவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதானா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க ேண்டும்.








    ReplyDelete
  10. பொத்தம் பொதுவாக தனியார் பள்ளிகளிகளை குறை சொல்வதென்பது இன்றைக்கு பெரும்பாலான கல்வியாளர்களின் பார்வையாக இருக்கிறது.இந்த அரைகுறை பார்வையை விட்டுவிட்டு யதார்த்தமான, அனைவர்க்கும் பொதுவான நடைமுறை சூழலை அவர்கள் புரிந்துகொள்ள முன் வரவேண்டும். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாதி ஊதியம் வழங்குவதாக ஒரு பேச்சுக்கு அரசு அறிவித்திருந்தால் கூட என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை அனைவரும் அறிவோம்.குறைந்த பட்சம் சுழற்சி முறையிலாவது வகுப்புகளை நடத்தியிருக் கலாம்.எந்த மாணவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கவில்லை என்பதே உண்மை.அவர்களைப் பாதுகாக்க பெற்றோர் படும் பாட்டை சொல்லி மாளாது.வகுப்புகள் இருந்திருந்தால் கல்வியும்,பாதுகாப்பும் சேர்ந்தே கிடைத்திருக்கும்.அரசு பள்ளிகளில் கோவிட்-19 வழிகாட்டு நெறிமுறைகளை பி ன்பற்றுவது சிரமம் என்பதற்காக விடுமுறை விடுவது மடடுமல்லாமல் தனியார் பள்ளிகளை குறை கூறுவது என்பது கோமாளித்தனமே.எத்தனை தனியார் பள்ளிகளில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்கிறது என்பதை வேண்டுமானால் ஒரு சர்வே எடுத்து தெரிந்து கொள்ளலாம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி