ஆசிரியர்களுக்கு குடியிருப்பு கட்ட இடம் தேர்வு. - kalviseithi

Apr 21, 2021

ஆசிரியர்களுக்கு குடியிருப்பு கட்ட இடம் தேர்வு.


ஆசிரியர்களுக்கு குடியிருப்பு கட்ட இடம் தேர்வு செய்ய முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது : 

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி 2021-2022ம் ஆண்டுக்கான திட்டமிடலில் ஆசிரியர்களுக்கான குடியிருப்பு கட்டமைப்புக்கு தேவையான முன்மொழிவுகள் மத்திய அரசால் கோரப்பட்டுள்ளது. எனவே ஆசிரியர்களுக்கு குடியிருப்பு கட்டமைப்பிற்கு மாவட்டங்களில் இருந்து கருத்துருக்கள் பெறப்பட்டு தங்கள் நிலையில் ஆய்வு செய்து உரிய குறிப்புரைகள் மற்றும் இணைப்புகளுடன் மத்ய அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பிவைக்க வேண்டும். இடம் தேர்வு செய்யும் போது மலை பகுதிகள் மற்றும் போக்குவரத்து வசதியற்ற தொலைதூர பகுதிகளுக்கு முன்னுரிமை அடிப்படையிலும் விபரங்களை அனுப்பி வைக்க வேண்டும். 

இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

19 comments:

 1. rich becomes richer... poor becomes poorer...

  ReplyDelete
  Replies
  1. எதுக்குடா குடியிருப்பு அதுலயும் ஊழல் செய்யவா??? ஆசிரியர்கள் அனைவருக்கும் ஏறக்குறைய சொந்த வீடு உள்ளது , இப்பொழுது குடியிருப்பு கட்டி என்ன கிழிக்க போறீங்க.. முதல்ல வீடு இல்லாத ஏழைகசளுக்கு நல்ல தரமான வீட்டை கட்டி கொடுக்க பாருங்கள்..

   Delete
  2. ஆசிரியர்களால் கலாசாரத்தை படித்தவர்களுக்கு நன்றி இருக்க வேண்டாம். குறைந்த பட்சம் காழ்ப்புணர்வையாவது கொட்டாமல் இருக்கலாம்.

   Delete
 2. அனைத்து ஆசிரியர்களுக்கும் சொந்த வீட்டிற்கு அருகே பள்ளி இருப்பதில்லை. அதிக பள்ளிகள் தொலைதூரத்திலும் மற்றும் கிராமங்களில் உள்ளன. இவ்வாறான இடங்களில் வாடகைக்கும் வீடுகள் இருப்பதில்லை. எனவேதான் இவ்வாறான பள்ளிகளுக்கு அருகே ஆசிரியர் குடியிருப்பு கட்ட்டி அங்கு தங்கும் ஆசிரியர்ககளிடம் அவர்கள் வாங்கும் ஊதியத்தில் 10% வாடகையாக பிடித்தம் செய்யப்படும்.எந்த ஆசிரியர் க்கும் இலவசமாகவும் வாடகை இல்லாமல் வீடுகள் ஒதுக்கீடு இல்லை. எனவே தயவுசெய்து ஆசிரியர்களை அவதூராக பேசவேண்டாம்.

  ReplyDelete
  Replies
  1. no one is finding fault on teachers, its all government who always care about politicians, government Servants...

   what about the poor who are homeless, jobless, etc?

   have they built any house for homeless??
   dont government have enough space in tamilnadu ?

   Delete
 3. Ethuku veedu illaathavangaluku veedu katti tharanum.? Ozhunga padithu velaiku poi salary vaangi veedu kattunga. Somberigaluku veedu etharku?

  ReplyDelete
 4. naa irukum pothu ezhaya thaan irunthen. Ippo padithu job poi salary vaangi kadan vaangi veedu kattiten. Athu police neengalum veedu kattungal.

  ReplyDelete
 5. Ithu ithu ivanuku nu God decided pannirukar. Athanpadi thaan nadakum. Ellaam nanmaike endru ninaithu kollungal. India vil yaarum poor kidaiyaathu. Ellaarkiteyum money iruku. But savings illa. Ellaam vattiku vitutaanga.

  ReplyDelete
  Replies
  1. என்ன madam நீங்க வட்டி தொழில் செய்யறீங்களா?? இந்தியாவில் ஏழைகளே இல்லையா?? உங்களை போன்ற தற்குறிகள் வெறும் புத்தகத்தை படித்து தேர்ச்சி பெற்று விட்டு சமூகத்தையும் சமூக அவலங்களையும் சிறிதும் அக்கரையின்றி பேசும் உங்களால் நல்ல மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி... பார்வையை விசாலமாக்குங்கள் , அரசு பணி கிடைத்த அனைவரும் அறிவாளியும் இல்லை ,அரசு பணி கிடைக்காத அனைவரும் முட்டாள்களும் அல்ல.. சமூக அக்கறை இல்லாமல் வெறும் புத்தகத்தை மட்டுமே நடத்தும் ஆசிரியர்களை உருவாக்கி வைத்திருப்பது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்..

   Delete
  2. Arivali pathi naa ethum pesala. Chumma government a kurai sollitu irukinga?. Poor va irukarathu epadi theriyum? Muttaal yaarum illa. Avanga life epadi run pannanum nu avangaluku theriyum

   Delete
  3. Samooga avalangal naam pesi enna panna mudiyum? Athuku naam oru athigaariyaavo arasiyilvaathiyaagavo irukanum

   Delete
  4. Geetha madam... thidirnu govt collapse agiduchu, terrorist attack agiduchuna govt servents polappum naridum. ungaluku govt job irukunu neenga secured ah feel pannitu pesuringa. andha job ah resign pannitu vandhu neenga ithe dialogue pesa mudiyuma.. god decide pannala. ovvoru family kum govt job kuduka mudiyathu. inga ellarume govt job venunu ketutu nikkala... aana minimum salary nu onnun fix pannala... padippu ku etha job salary ila.. fraud thanam panni evlo venalum earn pannalum yarum kandukurathu ila. govt rules follow panni valuravan kastapatutu than irukan, even neenga kooda income tax katitu emandhutu than irukinga... unga area la hotel vechu nadathuravan, reasl estate pannuravan, business broker velai pakuravan, lanjam vanguravan elame tax katturana??
   unga pullaingala govt school la padika vaikiringala... ?

   Delete
  5. Soon it will happen bro.. Modi is taking india towards economy crash.

   Delete
 6. Unga pillaingal nalla padika vaiyungal. Nalla velaiku anupungal. Thozhil solli thaarungal.

  ReplyDelete
 7. Samooga akkarai politics ku thaan irukanum... Namaku irunthu enna seiya mudiyum?

  ReplyDelete
 8. முதலில் ஆசிரியர் பணி நியமனம் செய்யுங்கள்

  ReplyDelete
 9. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

  ReplyDelete
 10. 4ஆண்டுகளுக்கு முன்னதாக எழுதிய தேர்வு,,,,சிறப்பாசிரியர்கள் தேர்வு,,,அதில் தமிழ் வழியில் உள்ளவர்களுக்கு இன்று வரை பணி நியமனம் செய்யவில்லை

  ReplyDelete
 11. Konjam porumaiyaga irungal April 30 varai.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி