அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு சுழற்சி முறையில் தொடர்ந்து பணிக்கு வர வேண்டும் - சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் ஆசிரியருக்கு விடுமுறை? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 26, 2021

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு சுழற்சி முறையில் தொடர்ந்து பணிக்கு வர வேண்டும் - சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் ஆசிரியருக்கு விடுமுறை?

 

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வந்து அலுவல் பணிகளை கவனிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது தமிழகத்தில் கொரோனா பரவலால் தற்போது பள்ளிகள் மூடப்பட்டு கல்வி தொலைக்காட்சி மற்றும் இணைய வழியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன . 


 மேலும் தவிர்த்த பிற வகுப்புகள் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன நோய் பரவல் சூழல் சரியான பின்னர் +2வகுப்பு பொதுத் தேர்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கிடையே கொரோனா பரவலை கருத்தில் கொண்டு செய்முறை தேர்வுகள் முடிந்த பின் மாணவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து தேர்வுக்கு தயாராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


அதேநேரம் ஆசிரியர்கள் நிலை குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை .இந்நிலையில் தோற்று வராமல் தீவிரம் கருதி விடுமுறை வழங்குமாறு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் சுழற்சி முறையில் பணி இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் கூறும்போது அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விடுப்பு வழங்குவது தொடர்பாக துறை செயலாளருக்கு பரிந்துரை 


செய்யப்பட்டுள்ளது எனவே அரசு தரப்பில் உரிய அறிவிப்பு வெளியாகும் வரை சுழற்சி முறையில் ஆசிரியர்கள் தொடர்ந்து பணிக்கு வர வேண்டும் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட இதர பணிகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் நோய் பாதிப்பில் உள்ளவர்கள் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் முதன்மை கல்வி அதிகாரியிடம் அனுமதி பெற்று பணியில் இருந்து விலகிப் பெற்றுக் கொள்ளலாம் அதே சமயம் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் ஆசிரியருக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



3 comments:

  1. Summa irundhu sambalam vanga evlo easy ah irukku ivangalukku?

    ReplyDelete
  2. Neeyum padichi asiriyar akalame athai vitu aduthavarai paruthu poramaiyil sakathe

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி