வருமானம் இன்றி தவிக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 27, 2021

வருமானம் இன்றி தவிக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை!


கொரோனாவால் பள்ளிகள் திறக்கப்படாததால் தனியார் பள்ளி ஆசிரியர்கள் வருமானம் இன்றி தவிப்பு... தினக்கூலியாக வேலை செய்யும் அவலம்...

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓரண்டாக தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் கூலி


 

வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படும் 300க்கு மேற்பட்ட தனியார் பள்ளிகளில் சுமார் 40,000 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டாக தனியார் பள்ளிகள் மூடப்பட்டதால் அப்பள்ளி ஆசிரியர்கள் வருமானமின்றி வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். கொரோனா பரவல் முதல் அலையில், 


 தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்த நிலையில், மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அவர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். அதற்குள்ளாகவே கொரோனா 2ஆம் அலை பரவத் தொடங்கியுள்ளதால், மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தனியார் பள்ளிகள் திறக்கப்படுவது தள்ளிப்போனது.

இதன் காரணமாக தனியார் பள்ளி ஆசிரியர்கள் வருமானமின்றி குடும்பத்தை நடத்த முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இதனால் கிராமப் புறங்களில் உள்ள ஆசிரியர்கள் கட்டடம் மற்றும் விவசாய பணிகளுக்கு 


 சென்று தங்களது பிழைப்பை நடத்தி வருகின்றனர். அதிலும் சொற்ப வருமானமே கிடைப்பதாக ஆசிரியர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

தெலங்கானாவில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 25 கிலோ இலவச அரிசி வழங்குவது போல் தமிழக அரசும் தங்களுக்கு 


 வழங்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மாணவர்களின் எதிர்காலத்திற்கு வெளிச்சமாக திகழும் ஆசிரியர்களின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகி உள்ள நிலையில் அவர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

14 comments:

  1. Hello boos all private school collect full fees from student ( without out teach) where salary ask your management

    ReplyDelete
  2. Hello boos all private school collect full fees from student ( without out teach) where salary ask your management

    ReplyDelete
    Replies
    1. Nee moodu... without teaching govt staff getting full salary...they r living happily... govt does not conduct any exam ... govt does not make any posting...both govt and private management r equal ?

      Delete
    2. How can telengana govt provide each private teacher rs.2000 and 25kg rice bag...y can't TN govt ? They know only how to save their wisdom... they don't bother about their people ...they want only their posting should not move to others...there is no humanity in TN govt...I ashame to live in TN by ruling this govt... finally I would like to say a matter... definitely no politicians will die in a good death...If they don't serve for people loyally...

      Delete
    3. Hello boss apadinna neenga government staff a than irupeenga neenga amaithiya irunga.... Few Parents only pay the fees remaining parents are not payees....

      Delete
  3. Guys full salary illa 30% than podaranga athuvum below 10000 salary people get very low amount if they handle single parent their situation very tuff.please don't scold private teachers.we r very worry our future.please guys.

    ReplyDelete
  4. இவர்கள் எல்லோரையும் அரசுக்கும் அரசு ஆசிரியர்களுக்கும் கண் தெரியாது.

    ReplyDelete
  5. Private teachers life is very critical including me.

    ReplyDelete
  6. வருகின்ற காலகட்டத்தில் அனைத்து தனியார் ஆசிரியர் பெருமக்களும்.... ஏதாவதொரு தேர்வில் (Tnpsc,Trb) தேர்ச்சி அடைந்து உங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றி கொள்ளுங்கள்.... அதை விடுத்து யாரையும் வசை பாடி...பாடி .... எந்தவொரு பிரயோஜனமும் இல்லை.....

    ReplyDelete
    Replies
    1. Its not possible to get all people the govt. Job as you said tnpsc or trp. If u all try means more competition will be there. Only alternative way to do some self employment or some own business or some suitable job somewhere in the professional manner

      Delete
  7. Private school collect full fees from student,. Why they don't give salary our teachers ask that friends....

    ReplyDelete
  8. தனியார் பள்ளி முதலாளிகளிடம் தான் கேட்க வேண்டும்....

    ReplyDelete
  9. தனியார் பள்ளி ஆசிரிய கூமுட்டைகள் அனைவரும் அந்த மானங்கெட்ட வேலையை கூந்தலென தூக்கி எறிந்தால் பள்ளி நிர்வாகம் ஒன்னும் புடுங்க முடியாது... ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது ... ஒரு dog வராது... இங்கு வந்து ஏன் பிச்சை எடுக்குறீர்கள்...

    அப்படியே போராட்டம் செய்ய கிளம்பினால் சுயநல ஜீவிகள் வரமாட்டார்கள்...

    ReplyDelete
  10. ஒரு கட்டிட மேஸ்திரி கூட கூலிக்கு வேலை செய்வதில்லை ஆனால் தனியார் பள்ளி ஆசிரியர்கள் செக்கு மாடு மாதிரி உழைத்து விட்டு ஏமாளியாக கூலி வேலை செய்து முதலாளியை செழிக்க வைத்து விட்டு புலம்பி என்ன புரயோசனம் மமுதலாளியிடம் வரும் வருமானத்தை உனக்கு பாதி எனக்கு பாதி என்று சொல்லும் காலம் மிக விரைவில்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி