தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 30, 2021

தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு வெளியீடு.


தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 133 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் என தந்தி டிவி நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் 5 முனை போட்டி நிலவியது.

இந்த தேர்தலில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் திமுக களப்பணியாற்றியது. அதுபோல் 3ஆவது முறையாக ஆட்சியை தக்க வைத்து கொள்ள அதிமுகவும் போராடியது. எனினும் மக்கள் என்ன தீர்ப்பளித்துள்ளார்கள் என்பது மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போதே தெரியவரும்.


விமர்சகர்

தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பிலும் அரசியல் விமர்சகர்களின் பார்வையிலும் திமுகவே ஆட்சியை பிடிக்கும் என கணிக்கப்பட்டது. அந்த வகையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை இன்றைய தினம் ஏபிபி சி வோட்டர், ரிபப்ளிக், தந்தி டிவி, இந்தியா டுடே, சாணக்கியா உள்ளிட்ட நிறுவனங்கள் நடத்தின.


திமுக கூட்டணி

அதில் தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பில் தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக 133 இடங்கலிலும் அதிமுக 68 இடங்களிலும் வெல்லும் வாய்ப்புகள் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அது போல் 33 தொகுதிகளில் அதிமுக மற்றும் திமுக கூட்டணியிடையே போட்டி நிலவும்.


அதிமுக கூட்டணி

இந்த 33 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியே வென்றாலும் 68+33= 101 தொகுதிகளே வருகிறது. எனவே அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. மேலும் அதிமுக 179 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் அதிமுக மட்டும் 63 இடங்களில் வெல்லும். 22 தொகுதிகளில் கடும் போட்டி நிலவும்.



5 comments:

  1. ஏண்டா Cvoters indioroday Republic நடத்துனதெல்லாம் உங்களால சொல்லமுடியல தந்தி டீவி முதல்லயே ஜால்ரா வி... அதைப்போய் சொல்றீங்கன்னா......கல்விச்செய்திக்கு குண்டி எரிச்சல் அதிகமோ

    ReplyDelete
  2. DMK vandhalum ADMK vandhalum namma kun*iya nama than kaluvanum..... ellarum poi polappa parunga.......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி