TRB - 2,098 முதுநிலை ஆசிரியர் காலி பணியிட தேர்வு எப்போது??? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 11, 2021

TRB - 2,098 முதுநிலை ஆசிரியர் காலி பணியிட தேர்வு எப்போது???


தமிழகத்தில் 2,098 முதுநிலை ஆசிரியர் பணிக்கு மார்ச் 1 ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பம் பெறுவதை ஆசிரியர் தேர்வு வாரியம் ஒத்திவைத்த நிலையில் , இந்தத் தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

தமிழகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 1,863 முதுநிலை ஆசிரியர் மற் றும் உடற்கல்வி இயக்குநர் நிலை - | பணியிடங்கள் மற்றும் 236 பின்னடைவு பணியிடங்கள் என மொத்தம் 2,098 பணியிடங்களை நிரப்புவதாக கடந்த பிப்.11 ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இதற்காக ஆன்லைன் மூலம் மார்ச் 1 ம் தேதி முதல் மார்ச் 25 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் , எழுத்துத் தேர்வு ஜூன் 26 , 27 ம் தேதிகளில் நடத்தப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.


 இந்நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு கடந்த பிப் . 26 ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்னதாக முதுநிலை ஆசிரியர் தேர்வு தேதி வெளியிடப்பட்டதால் , தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் என முதுநிலை பட்டதாரிகள் எதிர்பார்த்தனர். இதற்காக மார்ச் 1 ம் தேதி ஆன்லைனில் விண்ணப்பிக்க முதுநிலை பட்டதாரிகள் தயாராகினர். ஆனால் தொழில்நுட்ப காரணங்களால் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பணி ஒத்தி வைக்கப்படுவதாகவும் , ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி எப்போது கிடைக்கும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் திடீரென அறிவித்தது. 


இதனால் தேர்வுக்கு தயாராகி வந்த முதுநிலை பட்டதாரிகள் பலர் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6 ம் தேதியே முடிந்துவிட்டது. மே 2 ம் தேதிதான் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது என்ற போதிலும் , வாக்குப்பதிவு முடிந்து விட்டதால் பறக்கும் படை சோதனை போன்றவை முடிவுக்கு வந்துள்ளன.ஏற்கெனவே கடந்த ஆண்டு மார்ச் முதல் பள்ளிகள் அனைத்தும் பூட்டிக்கிடக்கின்றன. 9 , 10 , பிளஸ் 1 , பிளஸ் 2 வகுப்புகள் மட்டுமே சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட நிலையில் , கொரோனா 2 வது அலை அதிகரித்து வருவதால் பிளஸ் 2 வகுப்புகள் மட் டுமே பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு தற்போது நடத்தப்பட்டு வருகிறது. மற்ற வகுப்புகளும் மூடப்பட்டுவிட்டது. இதனால் ஒரு கல்வி ஆண்டு முழுவதும் கொரோனாவில் கழிந்துள்ளது. 


இந்த காலத்தில் எந்த ஆசிரியர் பணிக்கும் தேர்வு நடத்தாத நிலையில் , முதுநிலை ஆசிரியர் தேர்வு அறிவிப்பை வெளியிட்ட போதிலும் , விண்ணப்பம் பெறுவதை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஒத்திவைத்துள்ளது. எனவே முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட்டு தேர்வும் குறித்த நேரத்தில் நடத்த வேண்டும் என முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

18 comments:

  1. 40-45 age limit problem irruku

    ReplyDelete
    Replies
    1. *2021 முதுகலை தமிழ் தேர்வு எழுத உள்ள உங்களுக்க வெற்றியாண்டாக அமையவேண்டுமா*...

      கடின உழைப்பும், ஆர்வமும் தன்னம்பிக்கையும் உடையவரா நீங்கள்...

      உங்களுக்கான தகவல் இது...

      *தருமபுரி தமிழ்த்தாமரை* மூலம் நேரடி மற்றும் தொலை தூரத்தில் உள்ளவர் களுக்காக பலரின் வேண்டுகோளுக்கினங்க *PG TAMIL தேர்வுப் பயிற்சிக்கான குழு TEST BATCH இரண்டாம் அணி தொடங்கப்பட உள்ளது*. அலகுக்குள்ளும், அலகுவாரியாகவும் முழுத்தேர்வாகவும் *100 க்கும் மேற்பட்ட தேர்வுகள்* நடத்தப்படும் ..
      இத் தேர்வுகள் *தினமும் நடைபெறும்*

      இதுவரை *இணைந்த 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தினசரி தேர்வின் மூலம் சிறந்த முன்னேற்றம் அடைந்துள்ளனர்*

      சென்ற *முதுகலை ஆசிரியர் தமிழ் பாடத் தேர்வில் online மற்றும் நேரடி பயிற்சி பெற்றவர்களில் 23 பேர் முதுகலை ஆசிரியர்களாக ஓராண்டு பணியினைச் சிறப்பாக மகிழ்வுடன் நிறைவு செய்துள்ளனர்*

      தமிழ்த்தாமரையினர் *மாநில அளவில் 2,3,4 ஆம் இடங்களையும்,10 பேர்100 க்கும் மேல் மதிப்பெண்களையும் தங்களது கடின உழைப்பால் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது*.

      *NET தேர்வில்* தங்கள் கடின உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும்
      *7 பேர் JRF தகுதியையும் 40 க்கும்மேற்பட்டவர்கள் வெற்றியையும் கண்டுள்ளனர்*..

      *NET அகில இந்திய அளவில் தமிழில்முதலிடம்,ஒட்டுமொத்த மதிபெண்ணில் இரண்டாம் இடம் என சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளனர்*.


      *2021 PGTRB TAMIL க்கான அடுத்த அணிக்கான online பயிற்சி 19.02.2021 முதல் தொடங்கி உள்ளது*.
      எனவே வெற்றிக்காக *தினமும் குறைந்தது 12 மணி நேரம் உழைக்கத் தயார் நான் என்பவர்கள் மட்டும்* தேர்வுப் பயிற்சியில் சேர தொடர்பு கொள்ளவும்..

      *கடின உழைப்பாளிகளுக்கு மட்டுமே இக்குழுவில் சேர வாய்ப்பு கிடைக்கும்*

      எனவே வெற்றி உங்கள் வசமாக வேண்டுமென்றால் வரும் மாதங்களில் *மிகச்சரியாக திட்டமிட்டு உழைப்பவர்கள் மட்டும் சேர தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்*..
      கடந்த தேர்வில் *CV சென்று வாய்ப்பை இழந்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்*

      தொடர்புக்கு 8838071570
      *Watsapp ல் உங்கள் பெயர் குறிப்பிட்டு தொடர்பு கொள்ளலாம்*.

      இது *விளம்பரமல்ல* ஆர்வமுள்ளவர்களின் தகவலுக்காக..

      Delete
  2. Wohoo!🎉
    APEXCARE ACADEMY your Coaching App is now on Play Store!🤩
    Join the online class and Test batch PGTRB physics..............


    To download the app App Link: https://treeloki.page.link/gxkF

    ReplyDelete
  3. 40-45 age limit problem solve aaguma. Women's nna age relaxation kidaikkuma.

    ReplyDelete
  4. Age relaxation kidaithalthan trb ezhutha mudiyumannu theriyum.nanga exam kku prepare panratha vendamma. Exam ezhutha viduvangalla. Nambikaiye poochu.

    ReplyDelete
    Replies
    1. Idhunaal vara oru kili kilichutinga inimay neega prepare pannitalum govt job vangida veandiydhu tha...

      Delete
  5. Apexcare Academy

    Mobile 8807432425

    Online class and test...

    Admission going on...

    Ref app play store..

    Wohoo!🎉
    APEXCARE ACADEMY your Coaching App is now on Play Store!🤩
    Join the online class and Test batch PGTRB physics..............


    To download the app App Link: https://treeloki.page.link/gxkF

    ReplyDelete
  6. 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கட்டாய ஓய்வு செய்யப்பட்டுள்ளனர். புதிய அதிகாரிகள் நியமனம் செய்தால் தேர்வு நடக்கும்

    ReplyDelete
  7. TRB தேர்வு இன்னும் சில மாதங்கள் தள்ளி போக வாய்ப்பு இருக்கலாம் என நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வருகின்றன.

    தற்போதைய syllabus மிகவும் பழையது என்பதால் NCTE nomrs படி இனிவரும் காலங்களில் trb தேர்வு பாடத் திட்டம் மாற்றி அமைக்கப்படலாம்.

    பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete
  8. தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை சில சட்ட சிக்கல் ௨ள்ளது

    ReplyDelete
  9. இதனால் தேர்வர்களுக்கு கவலையில்லை பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றும் கோச்சிங் சென்டரின் வேலை தேர்வு நடத்த தற்போது முடியாது நம் தகுந்த தகவல் ௮டுத்த ௮ரசு ௮மைந்த பிறகே தெரியவ௫ம்

    ReplyDelete
  10. First 40 age limit govt staff ku vaikanum

    ReplyDelete
  11. Veetil oruvaruku govt job nu sollanum.kudumbathil Rendu peril oruvaruku matume govt job nu sollanum

    ReplyDelete
  12. இந்த வேலைக்கு இத்தனை மணி நேரம் இவ்வளவு கூலி என ஊதியம் அரசு கடுமையாக நிர்ணயம் செய்தால் மட்டுமே போதும். அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி