கேந்திரிய வித்யாலயா 1-ம் வகுப்பு சேர்க்கைத் தேதி நீட்டிப்பு; 9-ம் வகுப்பு நுழைவுத் தேர்வும் ரத்து. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 1, 2021

கேந்திரிய வித்யாலயா 1-ம் வகுப்பு சேர்க்கைத் தேதி நீட்டிப்பு; 9-ம் வகுப்பு நுழைவுத் தேர்வும் ரத்து.

 


கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1-ம் வகுப்பில் சேர்வதற்கான சேர்க்கைத் தேதி கரோனா காரணமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. 9-ம் வகுப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2021-22ஆம் கல்வி ஆண்டில் 1ஆம் வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கியது. இதில் சேர இணையதளம் மூலமாகப் பெற்றோர்கள் விண்ணப்பித்தனர். இதற்குக் குழந்தைகளின் வயது மார்ச் 31, 2021-ன்படி, 5 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 7 வயது வரை இருக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.


பெற்றோர்கள் https://kvsonlineadmission.kvs.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், ஆண்ட்ராய்ட் செல்பேசி செயலி வாயிலாகவும் பதிவு செய்தனர்.

பதிவுப் பணிகள் முடிந்த பிறகு, கேந்திரிய வித்யாலயா சங்கதன் இணையதளத்தில் முதல் கட்ட சேர்க்கைப் பட்டியல் ஏப்ரல் 23-ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் சூழலைப் பொறுத்து சேர்க்கைப் பணி அறிவிப்பு ஏப்ரல் 30-ம் தேதியைத் தாண்டி நடைபெறும் என்று கேந்திரிய வித்யாலயா  அறிவித்துள்ளது. மாணவர் சேர்க்கைப் பட்டியல் மற்றும் காத்திருப்புப் பட்டியல் குறித்த விவரம் பின்னர் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல 9-ம் வகுப்பு நுழைவுத் தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னுரிமை அடிப்படையில், 9-ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் கே.வி. நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா 2-வது அலை காரணமாக கேந்திரிய வித்யாலயா  பள்ளி ஆசிரியர்கள், வீட்டில் இருந்து ஆன்லைன் வகுப்புகளை எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி