கொரோனா நிவாரண நிதிக்கு ரூ10,120 வழங்கிய 3ம் வகுப்பு அரசு பள்ளி மாணவன்! - kalviseithi

May 13, 2021

கொரோனா நிவாரண நிதிக்கு ரூ10,120 வழங்கிய 3ம் வகுப்பு அரசு பள்ளி மாணவன்!

 


நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா தகட்டூர் சுப்பிரமணியன் காட்டை சேர்ந்த சக்திவேல் -  சீதா தம்பதியரின் மகன் சுஹசன் (8). அப்பகுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கிறான். கொரோனா தொற்று பரவலால் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதற்காக பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களும் டேப்லேட் வாங்க வேண்டும் என்ற ஆசிரியரின் வேண்டுகோளுக்கு ஏற்ப மாணவர்கள் உண்டியலில் பணம் சேர்த்து வந்தனர்.


இந்நிலையில் கொரோனா நிவாரண பணிக்காக, தொழிலதிபர்கள் நிதி வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

சிறுவன் சுஹசன், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை வழங்க வேண்டும் என்று தனது தந்தையிடம் கூறியுள்ளான். இதையடுத்து தந்தை சக்திவேல், சுஹசன் சேர்த்து வைத்திருந்த ரூ.10,120ஐ வங்கியில் டிடியாக எடுத்து வீட்டிற்கு கொண்டு வந்தார். பின்னர் நாகை கலெக்டர் பிரவின் பி நாயரை நேரில் சந்தித்த மாணவன் சுஹசன், தனது பெற்றோர் முன்னிலையில் டிடியை வழங்கினான். சிறுவனின் இந்த செயலை கலெக்டர் மற்றும் அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி