தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1,212 செவிலியர்களுக்கு நிரந்தர பணி: சுகாதாரத்துறை அறிவிப்பு. - kalviseithi

May 4, 2021

தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1,212 செவிலியர்களுக்கு நிரந்தர பணி: சுகாதாரத்துறை அறிவிப்பு.

 

தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1,212 செவிலியர்களுக்கு நிரந்தர பணி வழங்கி சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் தேவை அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. நாளையுடன் ஒப்பந்தம் முடிவிருந்த நிலையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ரூ.15 ஆயிரம் சம்பளம் பெற்று வந்த செவிலியர்களுக்கு இனி ரூ.40 ஆயிரம் ஊதியம் கிடைக்கும் என கூறப்படுகிறது. 2015- 2016-ல் எம்ஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்று பதிவு செய்தவர்களுக்கு பணி நிரந்தம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பணியில் 1212 பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

நிரந்தரப் பணியாளர்களாக மாற்றப்பட்டுள்ள செவிலியர்கள், மே 10-ஆம் தேதிக்கு முன்னதாக சென்னையில் பணியில் சேர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் தற்போது கரோனா பேரிடர் தீவிரமடைந்து வருவதால், இவர்களை சென்னையில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுவரை ரூ.15 ஆயிரத்தை ஊதியமாகப் பெற்று வந்த செவிலியர்களுக்கு, இனி ரூ.40 ஆயிரம் ஊதியம் கிடைக்கும். ஒப்பந்தப் பணியாளர்களாக இருந்த தங்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்றிய தமிழக அரசுக்கு செவிலியர்கள் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

6 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி