பத்திரிக்கை ஊடகத்துறை சேர்ந்த ஊழியர்களும் முன்களப் பணியாளர்களாக அறிவிப்பு. - kalviseithi

May 4, 2021

பத்திரிக்கை ஊடகத்துறை சேர்ந்த ஊழியர்களும் முன்களப் பணியாளர்களாக அறிவிப்பு.

 
செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகத்தான மக்களாட்சியின் மாண்பிற்கு நான்காவது தூணாய் விளங்குவது ஊடகத் துறை. செய்திகளை மக்களிடம் உடனுக்குடன் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தலையாய பணியை ஊடகங்கள் மேற்கொண்டு வருகின்றன. அதற்காக அயராது உழைக்கின்றன.


கடும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஊடகத் துறையினர் முன்களப் பணியாளர்களாகத் தமிழகத்தில் கருதப்படுவார்கள். செய்தித்தாள்கள், காட்சி ஊடகங்கள், ஒலி ஊடகங்கள் போன்றவற்றில் பணியாற்றி வருகின்ற தோழர்கள் அனைவருமே இந்த வரிசையில் அடங்குவார்கள். முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் அவர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படும்.

6 comments:

 1. தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஒரு வருடமாக திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் வாழ்வில் ஒளியேற்றுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. Mr. Da neenga tet pass ah? Apdi pass panna ungaluku job confirm. Illana pasand pannunga. Private school waste. Nalla vela vanguvanga but salary thara matanga. Athuku govt onnum seiya mudiyathu.

   Delete
 2. 2013 mattum posting podanum naa kandipa 17 19 batch vidave maatom. 2013 ku already posting pottachi. so remaining 17 19 thaan. 17 19 batch ku oru posting kuda podala.... Sema kola verila irukkom. So 13 konjam amaithiyaa irunga. Election la neenga DMK ku work panna mattum ungala pottuda mudiumaaa...

  ReplyDelete
 3. I heard 2013 ku than first preference.. Becoz paper 1 certificate verifcation poitu job illama irukranga.. 2017 lam innum certificate verification pogavae illa. So 2017 ku late agalam.. First 2013 ku nu solranga.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி