16-வது சட்டப்பேரவையின் சபாநாயகராக திமுக எம்எல்ஏ அப்பாவு போட்டியின்றி தேர்வு. - kalviseithi

May 11, 2021

16-வது சட்டப்பேரவையின் சபாநாயகராக திமுக எம்எல்ஏ அப்பாவு போட்டியின்றி தேர்வு.


16-வது சட்டப்பேரவையின் சபாநாயகராக அப்பாவு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தொடங்கிய நிலையில், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை சபாநாயகராக பிச்சாண்டி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மனுதாக்கல் செய்வதற்கான அவகாசம் 12 மணியுடன் முடிந்த நிலையில் அப்பாவு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நாளை முறைப்படி இருவரும் பதவியேற்கவுள்ளனர். 

சட்டசபை பொதுத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அப்பாவு போட்டியிட்டு அமோகமாக வெற்றி பெற்றார். தமிழக சட்டசபை கூடடத்தொடர் இன்று காலை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. பின்னர் சட்டப்பேரவையில் யார் சபாநாயகராகத் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துவந்த நிலையில் தற்போது அப்பாவு தேர்வு செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி