கொவிட் -19 இரண்டாவது அலை : இபிஎப் கணக்கிலிருந்து முன்பணம் எடுக்க அனுமதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 31, 2021

கொவிட் -19 இரண்டாவது அலை : இபிஎப் கணக்கிலிருந்து முன்பணம் எடுக்க அனுமதி

கொவிட் -19 இரண்டாவது அலையை முன்னிட்டு , இபிஎப் சந்தாதாரர்கள் , தங்கள் கணக்கில் இருந்து 2 வது முறையாக முன்பணம் எடுத்துக் கொள்ள தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கழகம் ( இபிஎப்ஓ ) அனுமதித்துள்ளது. கொவிட் தொற்று சமயத்தில் இபிஎப் சந்தாதாரர்கள் சிறப்பு முன்பணம் எடுத்துக்கொள்ளும் வசதி பிரதமரின் ஏழைகள் நலன் திட்டத்தின் கீழ் ( PMGKY ) கடந்த 2020 மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது . இதற்கான திருத்தத்தை அரசாணை மூலம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் 1952 - ல் , மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் செய்தது . இந்த விதிமுறையின் கீழ் , 3 மாத அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படி ( டி.ஏ ) அல்லது இபிஎப் கணக்கில் உள்ள நிலுவைத் தொகையில் 75 சதவீதம் இதில் எது குறைவோ , அதை திருப்பிச் செலுத்த தேவையில்லாத முன்பணமாக இபிஎப் சந்தாதாரர்கள் எடுத்துக் கொள்ளலாம் . குறைவான தொகைக்கும் , உறுப்பினர்களால் விண்ணப்பிக்க முடியும் . இந்த கொவிட் -19 முன்பணம் , தொற்று காலத்தில் இபிஎப் உறுப்பினர்களுக்கு குறிப்பாக ரூ .15,000 - க்கும் கீழ் சம்பளம் பெறுபவர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கிறது . தற்போது , வரை இபிஎப்ஓ 76.31 லட்சம் கொவிட் -19 முன்பண கோரிக்கைகளை ஏற்று , உறுப்பினர்களுக்கு மொத்தம் ரூ .18,698.15 கோடி விநியோகித்துள்ளது . கொவிட் -19 இரண்டாம் அலை சமயத்தில் , ' மியுகோமைகோசிஸ் ' அதிகமாக பரவும் நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சிக்கலான நேரத்தில் , உறுப்பினர்களின் நிதி தேவைகளை தீர்க்க , அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட இபிஎப்ஓ முயற்சிக்கிறது . ஏற்கனவே முதல் முன்பணம் எடுத்த இபிஎப் உறுப்பினர்கள் , தற்போது , 2 வது முறையாக முன் பணம் எடுக்கலாம். இதற்கான விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் , முதல் முன்பணம் எடுத்ததற்கான விதிமுறைகளை போன்றதுதான்.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி