பிளஸ்2 தேர்வுகள் ரத்தாகுமா: மனுவை வரும் 31ல் விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம். - kalviseithi

May 28, 2021

பிளஸ்2 தேர்வுகள் ரத்தாகுமா: மனுவை வரும் 31ல் விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்.


'கோவிட் பரவலால் பிளஸ்2 பொதுத் தேர்வுகளை நடத்தாமல் ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்' எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை வரும் 31-ம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

வழக்கறிஞர் மம்தா சர்மா தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் கோவிட்19 பரவல் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் பிளஸ்2 தேர்வுகளை நடத்துவது சாத்தியமில்லாதது. ஆன்லைனில் அல்லது நேரடியாகத் தேர்வு மையத்துக்கு வந்து தேர்வு எழுத மாணவர்களை எழுதச் செய்வதும் கடினமானது. இந்த தேர்வுகளை நடத்தாமல் தள்ளிப் போடுவதும்; முடிவு ஏதும் எடுக்காமல் இருப்பதும் மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று படிக்க விரும்பும்பட்சத்தில் அது அவர்களது கல்வியை பாதிக்கும்.

10ம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்துவிட்டு, பிளஸ்2 தேர்வுகள் குறித்து எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது மாணவர்களுக்கு மன உளைச்சலை அதிகரிக்கும். அதனால், பிளஸ்2 வகுப்புத் தேர்வுகளை ரத்துசெய்ய மத்திய அரசுக்கும், சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ வாரியத்துக்கும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார்.இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், தினேஷ் மகேஸ்வர் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் அமர்வு, 'இந்த வழக்கை வரும் 31-ம் தேதி விசாரணைக்கு எடுக்கிறோம். பிளஸ்2 தேர்வுகள் குறித்து ஜூன் 1-ம் தேதிக்குள் சிபிஎஸ்இ ஏதேனும் முடிவுகள் எடுக்கலாம். அதனால் திங்கள் கிழமைக்குள் ஏதும் நடக்காது' எனத் தெரிவித்துள்ளனர்.

2 comments:

  1. பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும். அவர்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் தேர்வை நடத்தாமல் போனால். அவர்கள் தேர்வு எழுத வில்லை என்றால் அவர்களின் மார்க் எந்தவிதத்திலும் பயன்படாமல் போய்விடும் அதனால் என்னுடைய கோரிக்கை கட்டாயம் தேர்வு நடக்க வேண்டும் தயவுசெய்து இதை பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  2. தேர்வு ரத்துசெய்துவிட்டு உயர்கல்வி பயில நுழைவு தேர்வு தேவை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி