கல்வித் தொலைக்காட்சியில் 2 முதல் 9ஆம் வகுப்புக்கான Bridge Course தொடர்பான கானொலிகள் புதிய கால அட்டவணை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 8, 2021

கல்வித் தொலைக்காட்சியில் 2 முதல் 9ஆம் வகுப்புக்கான Bridge Course தொடர்பான கானொலிகள் புதிய கால அட்டவணை!

 


covid - 19 பெருந்தொற்று காரணமாக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை சரிசெய்யும்பொருட்டு Bridge Course மற்றும் Work Book தயாரிக்கப்பட்டு அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இதில் Bridge Course தொடர்பாக கானொலிகள் தயாரிக்கப்பட்டு 22.4.2021 முதல் 10.5.2021 வரை கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. 


தற்போது அதன் தொடர்ச்சியாக , 2 முதல் 9 - ம் வகுப்பு வரை உள்ள பயிற்சி புத்தகத்திலுள்ளவை ( Work Book ) அனைத்தும் காணொலிகளாக தயாரிக்கப்பட்டு கல்வித் தொலைக்காட்சி வாயிலாக இணைப்பில் கண்ட கால அட்டவணையின்படி 11.05.2021 முதல் 18.06.2021 வரை ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாக பார்வையில் கண்ட மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 எனவே அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அடிப்பவர்கள் இப்பொருள் சார்பாக அனைத்து வகை தொடக்க / நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களையும் மற்றும் அவர்களின் கீழ் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களையும் மேற்கண்ட காணொலி காட்சியினை காண்பதற்கு உரிய தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறது . மேலும் சார்ந்த வகுப்பு ஆசிரியர்கள் வாயிலாக அனைத்து மாணவர்களுக்கும் தகவல் தெரிவித்து மாணவர்கள் கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் பயிற்சி புத்தகக் காணொலிகளை காண்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.


Kalvi TV Bridge Course New Time Schedule - Download here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி