தமிழகத்தில் அசுர வேகத்தில் பரவுகிறது கொரோனா! இன்று ஒரேநாளில் 20,768 பேருக்கு தொற்று உறுதியானது. - kalviseithi

May 2, 2021

தமிழகத்தில் அசுர வேகத்தில் பரவுகிறது கொரோனா! இன்று ஒரேநாளில் 20,768 பேருக்கு தொற்று உறுதியானது.

 


தமிழகத்தில் மேலும் 20,768 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 12,07,112 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு, குணமடைந்தோர் விவரங்கள் குறித்து தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,


* தமிழகத்தில் மேலும் 20,768 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 12,07,112 ஆக அதிகரித்துள்ளது.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 17,576 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 10,72,322 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 153 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 14,346 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் 72 பேரும், தனியார் மருத்துவமனையில் 81 பேரும் உயிரிழந்துள்ளனர்.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 6,078 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 3,45,966 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை 2,29,56,942 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,43,083 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் தற்போது 1,17,405 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 7,29,150 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 12,375 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,77,924 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் /8,393 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 38 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாரும் பாதிக்கப்படவில்லை.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 265 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரசு மையங்கள் 69; தனியார் மையங்கள் 196.

* வெளிமாநிலங்களில் இருந்து இன்று தமிழகம் வந்த 25 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

* ஆந்திர பிரதேசம்- 11

* ஜார்கண்ட்- 3

* மேற்குவங்கம்- 3

* ஒடிசா- 3

* கர்நாடகா- 2

* உத்தர பிரதேசம்- 1

* மிசோரம்- 1

* திரிபுரா- 1

* வெளிநாடுகளில் இருந்து இன்று தமிழகம் வந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

* USA -1

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி