பிளஸ்2 தேர்வு குறித்து பள்ளி கல்வி அமைச்சர் மீண்டும் ஆலோசனை - kalviseithi

May 12, 2021

பிளஸ்2 தேர்வு குறித்து பள்ளி கல்வி அமைச்சர் மீண்டும் ஆலோசனை

 


பள்ளிக் கல்வித்துறையின் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கடந்த இரண்டு நாட்களாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதையடுத்து, இரண்டாவது நாளாக  நேற்றும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் 32 மாவட்ட முதன்மைக் கல்வி  அலுவலர்கள் பங்கேற்றனர். அவர்களுடன் பள்ளிக் கல்வி இயக்குநர், தேர்வுத்துறை இயக்குநர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பிளஸ் 2 தேர்வை எப்படி  பாதுகாப்பாக நடத்துவது என்றும் ஆலோசிக்கப்பட்டது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள சூழ்நிலை குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் விவரம் கேட்கப்பட்டது. அதிகாரிகள் தெரிவிக்கும் விவரங்கள் அனைத்தும் முதல்வரிடம்  தெரிவிக்கப்பட்ட பிறகு பிளஸ் 2 தேர்வு நடத்துவது குறித்து முதல்வர் அறிவிப்பார்.

4 comments:

  1. பண்ணுங்க பண்ணுங்க பண்ணி ககிட்டே இருங்க. கல்வி துறை சர்வநாசம்.

    ReplyDelete
  2. Please cancelled the exam.student health is most important.in this situation more stress for each and every student.

    ReplyDelete
  3. Please tell the final decision abot the 12th std students final exam.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி