வங்கி வேலை நேரம் ஜுன் 6 வரை குறைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 31, 2021

வங்கி வேலை நேரம் ஜுன் 6 வரை குறைப்பு.

 

தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் வங்கிகளின் வேலை நேர குறைப்பு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


வங்கி வேலை நேரம்:


தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தாக்கம் அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர கட்டுப்பாடுகளை செயல்படுத்தி வருகிறது. முதல் கட்டமாக மே 10 முதல் மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கு விதிமுறைகளை அரசு அமல்படுத்தியது. இருப்பினும் நோய் தொற்றின் தீவிரம் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ள காராணத்தால் தமிழகத்தில் மே 24 முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிப்பை அரசு வெளியிட்டது.


ஜூன் மாத வங்கி விடுமுறை நாட்கள் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!!


முன்னதாக முழு ஊரடங்கு காலத்தில் வங்கிகளின் வேலை நேரம் காலை 10 மணி முதல் 1 மணி வரை மட்டும் என்றும், நான்கு முக்கிய சேவைகள் மட்டுமே வங்கிகளில் மேற்கொள்ளப்படும் என்றும் வங்கிகள் அறிவித்தது. வழக்கமாக வங்கிகளுக்கு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேலை நேரமாகும்.


தற்போது ஜூன் 7ம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதால் வங்கிகளின் வேலை நேரம் மீண்டும் ஒரு வாரத்திற்கு ஜூன் 6ம் தேதி வரை குறைக்கப்பட்டுள்ளதாக (காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரை) தமிழ்நாடு வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது. மூன்றில் ஒரு பங்கு பணியாளர்களுடன் சுழற்சி முறையில் பணி மேற்கொள்ளப்படும். ரொக்க பரிவர்த்தணை, என்.இ.எப்.டி., – ஆர்.டி.ஜி.எஸ்., வாயிலாக பணம் அனுப்புதல், அரசு வர்த்தகம், காசோலை பரிவர்த்தனை சேவைகள் மேட்டுமே மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி