வரும் கல்வியாண்டில் தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய மொழிகளில் பொறியியல் பாடங்களை கற்பிக்க AICTE அனுமதி - kalviseithi

May 27, 2021

வரும் கல்வியாண்டில் தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய மொழிகளில் பொறியியல் பாடங்களை கற்பிக்க AICTE அனுமதி

 

வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் பாடங்களை தமிழ் மொழியில் கற்பிக்க  அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய மொழிகளில் கற்பிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில் பொறியியல் பாடங்கள் தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன இதன் காரணமாக பள்ளிகளில் தாய் மொழியில் கல்வி பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே பொறியியல் படிக்க வேண்டும். இதன் காரணமாக கிராமப்புற மாணவர்கள்  பொறியியல் படிப்பில் சேர ஆர்வம் காட்டுவதில்லை இந்த நிலையில் அகில இந்திய தொழில்நுட்ப  கவுன்சில் AICTE தமிழ், இந்தி, தெலுங்கு, குஜாராத்தி, மராத்தி, கன்னடம் உள்ளிட்ட 7மொழிகளில் வரும் கல்வியாண்டு முதல்  பொறியியல் பயிலலாம் என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. 


இதன்காரணமாக ஆங்கிலத்தில் மட்டுமே இதுவரை இடம் பெற்றிருந்த பாடங்கள் தாய் மொழியிலும் இடம்பெறும். பொறியியல் பாடங்களை அந்தந்த பிராந்திய  மொழிகளில்  மொழி மாற்றவும் அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் திட்டமிட்டுள்ளது.  மேலும் 11 இந்திய  மொழிகளிலும்  பொறியியல் பாடங்களை கொண்டு வரவும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் முடிவு செய்துள்ளது. இதை தொடர்ந்து மாணவர்கள் அதிகம் பொறியியல் படிப்பில் சேர வாய்ப்பு உள்ளது என  AICTE தகவல் தெரிவித்துள்ளது.

10 comments:

 1. TRT(போட்டித்தேர்வு) EXAM MARK

  +
  D.T.ED OR B.ED EMPLOYMENT SENIORITY MARK (Paper1 or Paper2)
  +
  2013,2017,2019 TET PASS YEAR SENIORITY MARK

  இந்த மூன்றையும் கணக்கில் கொண்டு அதிக மதிப்பெண் அடிப்படையில் பணிநியமனம் செய்தால் யாருக்கும் பிரச்சினை இருக்காது
  இதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்களா?
  என் கருத்து சரியா?
  இது சரி என்றால் TRB பார்வைக்கு கொண்டு செல்லலாமா?

  நாம் அனைவரும் ஒருமித்த கருத்துக்கு வர வேண்டும். ஒற்றுமையுடன் எதிர்கொண்டு திறமையுள்ளவர்கள் பணியை பெற முயற்சி செய்ய வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. TET+Employment seniority is the best method. Noooo TRT.

   Delete
  2. TET only eligibility for teacher
   So
   Degree Employment registration seniority with TET exam pass only appointment is The best way

   Delete
  3. நன்றி நண்பரே

   Delete
  4. Muniyappan Bro neenga 2013 group pola... Mark 82 to 89 thaaneee...

   Delete
  5. I am 2013,2017,2019 passed candidate

   Delete
 2. இந்தி மொழியில் பாடங்களை தயாரிப்பதற்கான முயற்சிகள்

  ReplyDelete
 3. No TET mark. Degree employment registration priority. TET ONLY PASS FOR ELIGIBILITY.

  ReplyDelete
 4. No NEET AND TET TRB. THIS DMK MUDIVU. EMPLOYMENT SENIORITY IS THE BEST FOR TEACHER

  ReplyDelete
 5. Tet with employment seniority best way

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி