அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளுக்கான மறு தேர்வு ஒத்திவைப்பு. - kalviseithi

May 1, 2021

அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளுக்கான மறு தேர்வு ஒத்திவைப்பு.

 


அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரி மாணவர்களுக்கான மறு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை தொழில்நுட்பக் கல்லூரி (எம்ஐடி), கட்டிடக்கலை மற்றும் திட்டமிடுதல் பள்ளி ஆகிய 4 வளாககல்லூரிகள் செயல்படுகின்றன. இந்தக் கல்லூரிகளில் கடந்த ஆண்டுநவம்பர்- டிசம்பரில் நடத்தவேண்டியபருவத்தேர்வு கடந்த பிப்ரவரி - மார்ச்மாதங்களில் நடத்தப்பட்டது.


இணையவழியில் நடைபெற்ற இந்த தேர்வில் ஏற்பட்ட தொழில்நுட்பகோளாறு காரணமாக வளாக கல்லூரி மாணவர்களால் தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு மறு தேர்வு நடத்தஅண்ணா பல்கலை. முடிவு செய்தது. அதன்படி, இந்த தேர்வானது மே 3-ம் தேதி முதல் நடக்கவிருந்தது. இந்நிலையில், கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பதால், மறு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி