தமிழகத்தில் புதிதாக, நாளை அமைய உள்ள அரசில், முக்கிய பொறுப்புகளை வகிக்க, பள்ளி கல்வி அதிகாரிகள் இடையே கடும் போட்டி ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 6, 2021

தமிழகத்தில் புதிதாக, நாளை அமைய உள்ள அரசில், முக்கிய பொறுப்புகளை வகிக்க, பள்ளி கல்வி அதிகாரிகள் இடையே கடும் போட்டி !

 


தமிழகத்தில் புதிதாக, நாளை அமைய உள்ள அரசில், முக்கிய பொறுப்புகளை வகிக்க, பள்ளி கல்வி அதிகாரிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.


புதிய அரசு அமைந்ததும், அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் மாற்றப்பட உள்ளனர்.கடும் போட்டிபள்ளிக் கல்வி துறையில், செயலர் முதல் இயக்குநர், இணை இயக்குநர் வரையில், பல்வேறு பொறுப்புகளில், தி.மு.க., ஆதரவு அதிகாரிகள் நியமிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த பொறுப்புகளில் அமர, பள்ளி கல்வி துறை அதிகாரிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.பள்ளி கல்வி இயக்குநரகம், தொடக்க கல்வி துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், மெட்ரிக் இயக்குநரகம், பாடநுால் கழகம், ஆசிரியர் தேர்வு வாரியம் என, அனைத்து துறைகளிலும், மாற்றம் இருக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.


அ.தி.மு.க., ஆட்சியின் போது, அமைச்சர் செங்கோட்டையனின் ஆதரவு பட்டியலில் இருந்தவர்களும், மீண்டும் முக்கிய பொறுப்புகளில் அமர வாய்ப்புள்ளது.அரசுக்கு பிரச்னை இன்றி, நிர்வாக பணிகளை கவனிக்க வேண்டும் என்பதால், அவர்களை பயன்படுத்தி கொள்ள, தி.மு.க., தரப்பு முயற்சிக்கும் என, கூறப்படுகிறது.

முன்னுரிமை


அதேபோல், அ.தி.மு.க., அரசால் ஓரங்கட்டப்பட்ட அதிகாரிகளுக்கு, முன்னுரிமை கிடைக்கலாம். பள்ளி கல்வி செயலராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி உதயசந்திரன் பதவி வகித்தபோது, அவரால் சில அதிகாரிகள் நேரடியாக நியமிக்கப்பட்டனர்.ஆனால், உதயசந்திரன் வேறு துறைக்கு மாற்றப்பட்டதும், அவரது நம்பிக்கைக்குரியவர்களும், ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு மாற்றப்பட்டு, ஓரங்கட்டப்பட்டனர்.


அவர்கள், தி.மு.க., ஆட்சியில் முக்கிய இடங்களை பிடிக்கலாம் என, தகவல்கள் வெளியாகி உள்ளன.ஆனாலும், அதிகாரிகள் பலர் தங்களுக்கு வேண்டிய, தி.மு.க., - மா.செ.,க்களிடம் நெருக்கத்தை காட்டி, முக்கிய இடங்களுக்கு துண்டு போடுவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

8 comments:

  1. collection
    commission
    corruption

    ReplyDelete
  2. ஆசிரியர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்.
    தயவு செய்து நாடே பார்க்கும் முகநூலில்
    1) CPS ஒழித்து GPF தரப் போகிறார்
    2) பழைய ஓய்வூதிய திட்டம் தரப் போகிறார்
    3) ஊதிய முரண்பாடு களையப் போகிறார்
    இப்படிப்பட்ட பதிவுகளை இட வேண்டாம்..
    இது போன்ற பதிவுகள் முகநூலில் அதிகம் காண முடிகிறது, இத்தகைய பதிவுகளால் தான் இன்றைய இணையதள சமூகம் ஆசிரியர்களுக்கு எதிரானதாக மாறியுள்ளது.
    இன்னும் சிலர் வழக்கமான அகவிலைப்படி வழங்கினால் கூட, நமக்கு அரசு எதோ புதிய சலுகை வழங்கியது போல முகநூலில் வாட்ஸ்அப் குழுவில் பதிவிடுகின்றனர்..
    பொதுமக்களை ஆசிரியர்களுக்கு எதிராக திருப்பும் வேலையை செய்தித்தாள்கள் செய்து கொண்டிருக்கின்றன, இந்த நிலையில் ஆசிரியர்களே அந்த வேலையை தன்னை அறியாமல் செய்து வருகின்றனர்.

    ReplyDelete
  3. VERY GOOD; TEACHERS ARE SPURNED AND DISDAINED BY THE OTHER PEOPLE ONLY HEARING THESE WORDS MENTIONED ABOVE. THIS CHARACTER MUST BE SWEPT FROM US.

    ReplyDelete
  4. நல்ல கருத்து சார்

    ReplyDelete
  5. இதை முழுமையாக வாசிக்கும் போது ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது கல்விசெய்தி... ஏதாவது ஒரு அதிகாரிக்கு பதவி கிடைக்கும்.. இதைத் தானே சொல்ல வருகிறீர்.. இதை உக்காந்து டைப் வேறு செய்துள்ளீர். காலக் கொடுமை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி