அரசு ஊழியர்களுக்கு, கொரோனா நிவாரணம் வழங்க தடை கோரிய வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 13, 2021

அரசு ஊழியர்களுக்கு, கொரோனா நிவாரணம் வழங்க தடை கோரிய வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.

 


அரசு ஊழியர்களுக்கு, கொரோனா நிவாரணம் வழங்க தடை கோரிய வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


திருச்செந்துாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனு: கொரோனா நிவாரணம் முதல் தவணையாக, அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு 2,000 ரூபாய் வழங்க, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது; 2.07 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு 4,153 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது.மத்திய - மாநில அரசு ஊழியர்கள், அரிசிக்கான ரேஷன் அட்டை வைத்துஉள்ளனர்.


ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும், அரசு ஊழியர்களுக்கான சம்பளம் வந்து விடுகிறது. ஆனால், ஒரு தரப்பு மக்கள், சாப்பாட்டுக்காக போராடுகின்றனர். தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றும் முயற்சியாக, முதல்வரின் இந்த அறிவிப்பை எதிர்க்கவில்லை. அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கும் கொடுப்பதற்கு, இது உகந்த நேரம் இல்லை.பயனாளிகள் பலரும் சம்பளம் பெறுபவர்களாக உள்ளனர். அவர்கள் பணத்துக்கு கஷ்டப்படவில்லை.


தற்போது, மருத்துவ உட்கட்டமைப்புக்காக, கணிசமான நிதி தேவைப்படுகிறது. ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அதிகரிப்பது; கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்துவது தான் தற்போது முக்கியம். அவசர நிலையை எதிர்கொள்ள, நாம் தயாராக இருக்க வேண்டும்.எனவே அரசு ஊழியர்கள், பொதுத் துறை ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு, கொரோனா நிவாரணம் வழங்க தடை விதிக்க வேண்டும்.


ஊரடங்கால் வருமானம் இழந்தவர்களுக்கு மட்டும், நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில், மனு விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மூன்றாம் வாரத்துக்கு, முதல் பெஞ்ச் தள்ளிவைத்தது.

6 comments:

  1. வறுமானம் இல்லாதவங்களுக்கு மட்டும் கொடுக்கலாம். அரசு பணம் மிச்சமாகும். வேலைவாய்ப்பு கொடுங்க

    ReplyDelete
  2. அப்படியே எல்லா ஜாதிலயும் பெரு முதலாளிகள், பணக்காரர்கள் கணக்கெடுத்து தகுதி வாய்ந்தோரை கண்டறிய வேண்டும்.

    ReplyDelete
  3. டேய் ராம்குமாரு.. பழைய கஞ்சி சட்டி வாயா இதுலயுமாடா அரசு ஊழியர்களை இழுத்து விடுற.

    ReplyDelete
  4. பாதிக்கப்பட்டவர்களுக்கே அந்த தொகை சேர வேண்டும். அரசு ஊழியர்களான நாங்களும் அதையே விரும்புகிறோம். ஆனால் அரசு ஊழியர்கள் அல்லாத எத்தனையோ பணம் படைத்தவர்களும் அதை அனுபவிக்கிறார்கள். அரசு இதில் கவனம் செலுத்தி...தொழில் முடங்கி வருமானம் இல்லாமல் இருப்பவர்களுக்கு மட்டும் தொகை (கூடுதலாக) கிடைக்க ஆவண செய்ய வேண்டும். நான் என் பங்கினை வாங்காமல் இருக்க மாட்டேன். வாங்கி கொரோனா நிதியாக முதல்வருக்கு அனுப்பிவிடுவேன்.

    ReplyDelete
  5. Rajarajan sir சொல்வதுதான் உண்மை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி