தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி சிறப்பான ஆட்சியை வழங்குங்கள் : மு.க. ஸ்டாலினுக்கு டெல்லி முதல்வர் வாழ்த்து! - kalviseithi

May 2, 2021

தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி சிறப்பான ஆட்சியை வழங்குங்கள் : மு.க. ஸ்டாலினுக்கு டெல்லி முதல்வர் வாழ்த்து!

 


தமிழகத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான சட்டமன்றப் பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. .வாக்குப்பதிவு நிறைவடைந்து 26 நாட்கள் ஆன நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பெரும்பான்மையான தொகுதிகளில் தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் அதிக வாக்குகளுடன் முன்னணி வகித்து வருகின்றனர்.


தற்போதைய நிலவரப்படி, திமுக 152 இடங்களிலும் அதிமுக 81 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. தி.மு.க கூட்டணி வேட்பாளர்களின் மகத்தான் வெற்றியைத் தொடர்ந்து, 119 தொகுதிகளில் முன்னிலை வகித்து அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவிருக்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.இதனால் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக முதல்வராக பதவியேற்க இருக்கிறார்.

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மகத்தான வெற்றிப் பெற்றுள்ள மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி வெற்றிகரமாக ஆட்சி நடத்த வாழ்த்துகிறேன், எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி