மூன்று ஆண்டில் 2 பாடம் படித்தவருக்கு ஆசிரியர் பணி மறுக்கப்பட்டது சரியானதே: உயர் நீதிமன்றம் உத்தரவு. - kalviseithi

May 2, 2021

மூன்று ஆண்டில் 2 பாடம் படித்தவருக்கு ஆசிரியர் பணி மறுக்கப்பட்டது சரியானதே: உயர் நீதிமன்றம் உத்தரவு.


மூன்று ஆண்டு இளநிலை பட்டப்படிப்பில் 2 பாடங்கள் படித்தவருக்கு ஆசிரியர் பணி மறுக்கப்பட்டது சரியானதே என உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. 


மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்தவர் பாபு. இவர் இளநிலை பட்டப்படிப்பில் 2 ஆண்டுகள் பி.எஸ்.சி. (கணிதம்) படித்தார். 3-வது ஆண்டில் பி.ஏ. (வரலாறு) படித்தார். இவருக்கு 1995-ல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. (வரலாறு) பட்டம் வழங்கப் பட்டது. பின்னர் பாரதியார் பல்கலை.யில் பி.எட். முடித்தார். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பட்டதாரி ஆசிரியர் பணித் தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்புக்குச் சென்றார். 


ஆனால் 3 ஆண்டு இளநிலை பட்டப்படிப்பில் முதல் 2 ஆண்டுகள் ஒரு பாடமும், இறுதி ஆண்டில் மற்றொரு பாடமும் படித்ததால் ஆசிரியர் பணி மறுக் கப்பட்டது. அந்த மறுப்பை ரத்து செய்து தனக்கு ஆசிரியர் பணி கேட்டு, உயர் நீதிமன்ற கிளையில் பாபுமனுத் தாக்கல் செய்தார். 


அவருக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஆசிரியர் தேர்வாணையம் சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் தங்கள்உத்தரவில், மனுதாரர் மூன்று ஆண்டில் 2 பாடங்களை படித்துள்ளார். இது ஆசிரியர் பணிக்குத் தகுதியாக கருத முடியாது. தனி நீதிபதிஉத்தரவு தள்ளுபடி செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.

6 comments:

 1. அப்படி படிக்க அனுமதி தந்து அவர் வாழ்க்கையை வீனாக்கியது யார்? மூன்றாம் ஆண்டில் கோர்ஸ் மாற அனுமதித்த வங்க மேல கேஸ் போடலாமா? அப்படி மாற ரூல்ஸ் இல்லன்னு அப்பவே சொல்லியிருந்தா அவர் கணிதமே படித்திருந்திருப்பார் இல்லாவிடில் டிஸ்கன்டினியு பன்னிட்டு புதுஸா 3 வருடம் ஹிஸ்டரி படித்திருப்பார்.யனிவர்ஸிட்டியில ஒரு ரூல் வச்சிக்கிறானுங்க ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியம் ஒரு ரூல் வச்சிக்கிறானுங்க.இல்லீகலா அவர் கோர்ஸ் மாற சான்ஸ் இல்ல. அனுமதி பெற்றுதான் மாறியிருப்பார்

  ReplyDelete
  Replies
  1. Sariyayathan pesuringa. Unga levelukey ithlam therium pothu. Turn Ku theriyatha. Courtku theriyatha. Ipai lakhs kanakula problem iruku nanba

   Delete
  2. பல்கலை கழகங்கள் ஆயிரம் படிப்புகளை நடத்தும், அரசாங்கம் ஆசிரியருக்கு வைக்கும் தகுதியயை நாம் சரியாக படித்து டிகிரி வாங்க வேண்டும். நாம் தெளிவாக இருக்க வேண்டும், அவர்களை குறை சொல்லி ஒன்றும் இல்லை. ஏற்கனவே அரசு தகுதிகளை வரையறுத்து வைத்துள்ளது.

   பல்கலை கழகத்தில் அவர்கள் அந்த ஆசிரியர் முதல் இரண்டு வருடங்கள் வரலாறு தான் படித்து உள்ளார் என நினைத்து அவருக்கு மூன்றாம் ஆண்டில் வரலாறு பாடம் கொடுத்து இருக்கலாம். சம்பவம் நடந்து 20 வருடங்களுக்கு மேல் ஆகிறது. அப்பொழுது அவருக்கு சேர்க்கை கொடுத்த நபர் அது பற்றி தெரியாதவராய் கூட இருந்திருக்கலாம். அல்லது இந்த நபர் எனக்கு அதை தான் கொடுக்க வேண்டும் என கேட்டு இருக்கலாம்.

   Delete
  3. என்னங்க சொல்ரீங்க. முதல் இரண்டு ஆண்டு மார்க் கூட பார்க்காமலா cumulative, பட்டம் கொடுப்பாங்க.பர்மிஸன் இல்லாம இரண்டு ஆண்டு கணித கிளாஸ்ல இருந்திட்டு மூன்றாம் ஆண்டு ஹிஸ்டரி கிளாஸ்ல உட்காந்திருப்பாரா?

   Delete
 2. தப்பு செய்தவருக்கு தண்டனை கொடு

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி