வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை - தமிழக அரசு அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 28, 2021

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை - தமிழக அரசு அறிவிப்பு.

GO NO : 204 , DATE : 28.05.2021

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் "2017,2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பதிவினை புதுப்பிக்க தவறிய மனுதாரர்கள் பயன் பெறுவதற்கு சிறப்பு சலுகை" தமிழக அரசால் இன்று அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

 மூன்று மாதங்களுக்குள் ஆன்லைன் மூலமாக பதிவினை புதுப்பிக்க முயற்சிகள் மேற்கொள்ள முடியும்.




ஆணை மேலே 1 - ல் படிக்கப்பட்ட ஆணையில் , 2011 , 2012 , 2013 , 2014 , 2015 மற்றும் 2016 - ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

2 ) மேலே பார்வை 2 - ல் படிக்கப்பட்ட கடிதங்களில் , வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் , வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை , 2017 , 2018 மற்றும் 2019 - ஆம் ஆண்டுகளில் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்புப் புதுப்பித்தல் சலுகை வழங்கலாம் என அரசுக்கு பரிந்துரை அனுப்பியுள்ளார்.

3 ) மேற்கண்ட கருத்துருவினை அரசு ஆய்வு செய்து , தமிழ்நாட்டில் உள்ள வேலை வாய்ப்பகங்களில் 2017 , 2018 மற்றும் 2019 - ஆம் ஆண்டுகளில் ( 01.01.2017 முதல் 31.12.2019 வரை ) வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு , சிறப்பு புதுப்பித்தல் சலுகையை வழங்கி அரசு ஆணையிடுகிறது : 


இச்சலுகையைப் பெற விரும்பும் நபர்கள் , அரசாணை வெளியிடப்படும் நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் ஆன்லைன் மூலம் தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம் . 

( ii ) இச்சலுகை ஒரு முறை மட்டும் வழங்கப்படும் . 

( iii ) மூன்று மாதங்களுக்குப்பின் பெறப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும்.

( iv ) 1.1.2017 - க்கு முன் புதுப்பிக்கத் தவறியவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

12 comments:

  1. Sir na 2013 la pannadha athuku apram pannalam.epa pudhupeka mudiuma

    ReplyDelete
    Replies
    1. 1.1.2017 - க்கு முன் புதுப்பிக்கத் தவறியவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

      Delete
  2. What use? TN govt is not considering Employment seniority for appointment.....

    ReplyDelete
    Replies
    1. This government will give important employment seniority confirm.

      Delete
    2. This government will give important employment seniority confirm.

      Delete
  3. 2013,2017,2019 tet only eligible posting b.ed seniority method confirm

    ReplyDelete
  4. கொரோனா பாதிப்பால் இன்று இருப்பவன் நாளை இல்லை என்ற நிலையில் தேர்வா பதிவு மூப்பா என்ற சர்ச்சை தேவையா நண்பர்களே

    ReplyDelete
  5. Sir July 2016 renewl pannavendiyathu sir eppo naan Panna mudiyatha sir please help me.

    ReplyDelete
  6. Sir July 2016 la renewl pannavendiyathu sir endha salukaikka naan erandi varudama kathirundhen annual 2017 renewal Panna mudiyumnu gov sollranga sir please how to renwel my employment seniority please help me.

    ReplyDelete
  7. September 2016 renewal ippa renewal pannamudiyatha sir

    ReplyDelete
  8. 2014 Aug la renewal panradha ipa panna mudiyuma sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி