கல்விக் கடன் தர மறுத்தால் என்ன செய்வது? ஆயிரம் சந்தேகங்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 31, 2021

கல்விக் கடன் தர மறுத்தால் என்ன செய்வது? ஆயிரம் சந்தேகங்கள்

 

நான் பணியிலிருந்து ஓய்வுபெற்று, 10 ஆண்டுகளாக, குடும்ப சூழ்நிலை காரணமாக மாத ஓய்வூதியத்திற்கு வருமான வரி செலுத்த முடியவில்லை. இப்போது புதிதாக எவ்வாறு வருமான வரி கட்ட ஆரம்பிப்பது? ராமராவ், தஞ்சை.இணையத்திலும் கணினியிலும் நல்ல பழக்கம் உண்டென்றால், நீங்களே வருமான வரி வலைத்தளத்துக்குச் சென்று, பதிவு செய்து, விபரங்களைச் சமர்ப்பிக்கலாம். அல்லது பக்கத்தில் உள்ள பட்டயக் கணக்காளரது உதவியை நாடுங்கள். கடந்த நிதியாண்டுக்கான வருமான வரியை வரும் செப்டம்பருக்குள் செலுத்த வேண்டும். முந்தைய ஆண்டுகளுக்கான வரியைச் செலுத்த வேண்டும் என்றால், அதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டது. அந்த நிலையில், உங்கள் மொத்த வருவாய், வருமான வரி விலக்குக்குள் இருக்குமேயானால், வரி ஏதும் செலுத்த வேண்டாம். கூடுதலாக இருக்குமேயானால், அப்போது வரியோடு சேர்த்து, 1,000 ரூபாயை தாமதத்துக்கான அபராதமாகச் செலுத்த வேண்டும். நான் ஒரு ஓ.டி.டி., தளத்தில் சந்தா செலுத்தியுள்ளேன். ஒவ்வொரு மாதமும், 'ஆட்டோ டெபிட்' முறையில், சந்தா தொகை போய்விடுகிறது. இதை எப்படி நிறுத்துவது?பவானி சிவராமன்,சுவாமிமலை. ஓ.டி.டி., தளங்களில் சந்தாவை நிறுத்தும் வசதியை, எங்கோ மூலையில் மறைத்து வைத்து இருப்பர்.

அதைக் கண்டுபிடித்து நிறுத்துவது உங்கள் பாடு. ஆனால், செப்டம்பர் 30ம் தேதிக்குப் பின், வங்கிகள் ஆட்டோ டெபிட் வசதியை வழங்காது. ஐந்து நாட்களுக்கு முன்னரே, 'உங்களுக்கு ஆட்டோ டெபிட் வரப்போகிறது, அனுமதிக்கலாமா' என்று உங்களிடம் அனுமதி பெற்ற பின்னரே, பணம் வெளியே போகும். இன்னும் சில மாதங்களில், இதுபோன்று கண்ணுக்குத் தெரியாமல் பணம் கரைவது குறையும்.

2 comments:

  1. தலைப்பிற்கும் செய்திக்கும் சம்பந்தமில்லாமல்..அட்மின் துாங்கிவிட்டீர்களா...??

    ReplyDelete
  2. தலைப்பு ஒன்று,நீங்க கொடுத்த விளக்கங்கள் வேறாக இருக்கிறது...சரியான தகவலை கொடுக்க முயற்சிக்கவும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி