கல்பனா சாவ்லா விருது பெறுவதற்கு துணிவு மற்றும் வீர சாகசச் செயல்கள் புரிந்த பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன - தமிழ்நாடு அரசு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 31, 2021

கல்பனா சாவ்லா விருது பெறுவதற்கு துணிவு மற்றும் வீர சாகசச் செயல்கள் புரிந்த பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன - தமிழ்நாடு அரசு!

 

துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான “ கல்பனா சாவ்லா விருது ” ஒவ்வொரு ஆண்டும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் , சுதந்திரதின விழாவின்போது வழங்கப்படுகிறது . இந்த விருதில் , ரூ .5.00 இலட்சத்திற்கான காசோலையும் மற்றும் ஒரு பதக்கமும் அடங்கும் . . தமிழ்நாட்டைச் சேர்ந்த , துணிச்சலான மற்றும் வீர சாகசச் செயல் புரிந்த பெண் விண்ணப்பதாரர் மட்டுமே இவ்விருதினைப் பெறத் தகுதியுள்ளவர் . 2. 2021 - ஆம் ஆண்டு வழங்கப்படவுள்ள விருதிற்கான விண்ணப்பங்கள் , விரிவான தன்விவரக் குறிப்பு , உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் , சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in/ என்ற இணைய தளம் மூலமாகவோ அரசுச் செயலாளர் , பொதுத் துறை , தலைமைச் செயலகம் , சென்னை -600 009 அவர்களுக்கு 30.06.2021 - க்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும் . உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் . விருதுபெறத் தகுதியுள்ளவர் , இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்படுவார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி