தீவிரமான நாடு தழுவிய முழு ஊரடங்கை கொண்டு வந்தால் மட்டுமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் - எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 4, 2021

தீவிரமான நாடு தழுவிய முழு ஊரடங்கை கொண்டு வந்தால் மட்டுமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் - எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

 


இந்தியாவில் கொரோனா 3ஆம் அலைக்கு வாய்ப்புள்ளது என்று எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா எச்சரித்துள்ளார். அதே நேரம் தற்போது பலருக்கு தடுப்பூசி போடப்படுவதால் 3ஆம் அலையின் தாக்கம் தீவிரமாக இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.


இரவு நேரம் அல்லது பகுதி நேர ஊரடங்கால் கொரோனா பரவுவதை தடுக்க முடியாது என்றும், குறைந்தது இரண்டு வார காலத்திற்கு தீவிரமான நாடு தழுவிய முழு ஊரடங்கை கொண்டு வந்தால் மட்டுமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார். மருத்துவமனை கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தல், படுவேகமாக நோயாளிகளின் எண்ணிக்கையை குறைத்தல் மற்றும் தீவிர தடுப்பூசி திட்டத்தின் மூலம் மட்டுமே கொரோனா சங்கிலியை உடைக்க முடியும் என அவர் கூறினார்.


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,57,229 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மேலும் 3,449 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,20,289 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் இதுவரை 15,89,32,921 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி