ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி ! - kalviseithi

May 24, 2021

ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி !

 

தனியார் பள்ளியில் பாலியல் புகார்  எழுந்துள்ளது குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
சென்னையில் இன்று (மே 24) பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது, சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மீது, முன்னாள், இந்நாள் மாணவிகள் பலர் பாலியல் புகார் அளித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "அதுகுறித்த தகவல் எனக்கும் வந்தது. இது தொடர்பாக உடனடியாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். தலைமைக் கல்வி அதிகாரி (சிஇஓ) அதற்கான விளக்கத்தையும் அவர்களிடம் கேட்டுள்ளார். இது தொடர்பான புகார்கள் நேற்றைக்குத்தான் தங்களுக்கும் வந்ததாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புகாருக்கான விளக்கத்தை சிஇஓ மூலமாக பள்ளிக் கல்வித்துறை கேட்டுள்ளது. கமிட்டி அமைத்து விசாரணை நடத்தப்படும் எனப் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே இதே மாதிரியான புகார்கள் வந்திருந்தால், உரிய ஆதாரங்கள் இருந்தால் நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

நடந்தது என்ன?

சென்னையில் தனியார் பள்ளியில் ஒரு ஆசிரியர், ஆன்லைன் வகுப்பில் மோசமாகப் பேசி மாணவிகளைப் பாலியல் தொல்லை செய்வதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தன் ட்விட்டர் பக்கத்தில், ''சென்னையில் ஒரு தனியார் பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகள் பற்றி ஓர் ஆசிரியர் அருவருக்கத்தக்க வகையில் பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!
மாணவ, மாணவிகளுக்கு ஒழுங்கு பற்றி பாடம் நடத்தும் பள்ளிகள், தாய், தந்தையருக்கு அடுத்து கடவுளாக மதிக்கப்பட வேண்டிய ஆசிரியர்கள் அதற்கேற்ற வகையில் நடந்து கொள்கிறார்களா? என்பதை நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்; தவறு செய்தால் தண்டிக்க வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.

திமுக எம்.பி. கனிமொழி தன் ட்விட்டர் பக்கத்தில், ''சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒரு ஆசிரியர் மாணவர்களைப் பாலியல் துன்புறுத்தல் செய்வதாக எழுந்துள்ள புகார் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து குற்றம் செய்தவர் மீதும், அதைக் கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொண்டு செல்வேன் என்று உறுதியளிக்கிறேன்'' என்று தெரிவித்தார்.

இந்நிலையில், பாலியல் புகார்  எழுந்துள்ளது குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதி அளித்துள்ளார்.

8 comments:

 1. இதுவே ஒரு அரசு பள்ளி ஆசிரியர் மீது குற்றசாட்டு வந்திருந்தால்.... எவ்ளோ comments வந்திருக்கும்... இப்போ ஏன் மக்களே சைலன்ட் ah இருக்கீங்க ..

  ReplyDelete
  Replies
  1. இந்த‌ இழி செய‌லை செய்த‌வ‌ன் அர‌சுப் ப‌ள்ளி,த‌னியார் ப‌ள்ளி ஆசிரிய‌ர் என்றில்லை.. அவ‌ன் சாதார‌ண‌ பொதும‌க்களாக‌ இருந்தாலும் கடுமையாக‌ த‌ண்டிக்க‌ப்ப‌ட‌ வேண்டும்...அதுவே த‌வ‌றுக‌ளைக் குறைக்கும்..

   அதே ச‌ம‌ய‌ம்,
   டெல்லி அர‌சு சார்பாக‌ ச‌மீப‌த்தில் நிவார‌ண‌ப் ப‌ணியின் போது கொரொனா தாக்கி ம‌றைந்த‌ 1 கோடி நிதி உத‌வி பெற்ற‌ ஆசிரிய‌ரை அவ‌ர் அர‌சுப் ப‌ள்ளி ஆசிரிய‌ர் என்ற‌ ஒரே கார‌ண‌த்திற்காக‌ முக‌ம் தெரியாத‌ அந்த‌ ம‌னித‌ரை ம‌ன‌சாட்சி சிறிதும் இன்றி இதே க‌ல்விச் செய்தியில் ச‌ரியாக‌ப் பாட‌ம் ந‌ட‌த்தாத‌வ‌ர் என்று இங்கிருந்தே புல‌னாய்வு செய்து சான்றித‌ழ் வ‌ழ‌ங்கி,இற‌ந்தும் அந்த‌ ந‌ப‌ரைப் ப‌ற்றி இழிவாக‌ப் பேசிய‌ வ‌யிற்றெரிச்ச‌ல் அதிமேதாவி அரைவேக்காடுக‌ள்,
   க‌ள‌வானிக‌ள் க‌ள்ள‌ மெள‌ன‌ம் காப்ப‌து ஏன்?...
   க‌ருத்து கூறினால்
   த‌ங்க‌ள் மான‌மும் சேர்ந்து காற்றில் ப‌ற‌க்கும் என்ப‌தாலா?...

   அல்ல‌து

   இன‌ம்(த‌னியார் ப‌ள்ளி ஆசிரிய‌ர்) இன‌த்தோடு சேரும் என்ப‌தை உண்மைப்ப‌டுத்த‌வா?..

   Delete
 2. இங்க comment போட்ட அம்புட்டு பேரும் இப்போ யாருன்னு தெரியுது ����

  ReplyDelete
 3. பிஞ்சுக் கரம் பிடித்து அ ஆவண்ண என்று எழுதக் கற்றுக்கொடுத்து பின்பு அந்தக் பிஞ்சு மனதை நசுக்குவது ஏனோ இந்த சில போலியான மிருகங்கள்?
  தமிழ் வாழ்க

  ReplyDelete
 4. இந்த‌ இழி செய‌லை செய்த‌வ‌ன் அர‌சுப் ப‌ள்ளி,த‌னியார் ப‌ள்ளி ஆசிரிய‌ர் என்றில்லை.. அவ‌ன் சாதார‌ண‌ பொதும‌க்களாக‌ இருந்தாலும் கடுமையாக‌ த‌ண்டிக்க‌ப்ப‌ட‌ வேண்டும்...அதுவே த‌வ‌றுக‌ளைக் குறைக்கும்..

  அதே ச‌ம‌ய‌ம்,
  டெல்லி அர‌சு சார்பாக‌ ச‌மீப‌த்தில் நிவார‌ண‌ப் ப‌ணியின் போது கொரொனா தாக்கி ம‌றைந்த‌ 1 கோடி நிதி உத‌வி பெற்ற‌ ஆசிரிய‌ரை அவ‌ர் அர‌சுப் ப‌ள்ளி ஆசிரிய‌ர் என்ற‌ ஒரே கார‌ண‌த்திற்காக‌ முக‌ம் தெரியாத‌ அந்த‌ ம‌னித‌ரை ம‌ன‌சாட்சி சிறிதும் இன்றி இதே க‌ல்விச் செய்தியில் ச‌ரியாக‌ப் பாட‌ம் ந‌ட‌த்தாத‌வ‌ர் என்று இங்கிருந்தே புல‌னாய்வு செய்து சான்றித‌ழ் வ‌ழ‌ங்கி,இற‌ந்தும் அந்த‌ ந‌ப‌ரைப் ப‌ற்றி இழிவாக‌ப் பேசிய‌ வ‌யிற்றெரிச்ச‌ல் அதிமேதாவி அரைவேக்காடுக‌ள்,
  க‌ள‌வானிக‌ள் க‌ள்ள‌ மெள‌ன‌ம் காப்ப‌து ஏன்?...
  க‌ருத்து கூறினால்
  த‌ங்க‌ள் மான‌மும் சேர்ந்து காற்றில் ப‌ற‌க்கும் என்ப‌தாலா?...

  அல்ல‌து

  இன‌ம்(த‌னியார் ப‌ள்ளி ஆசிரிய‌ர்) இன‌த்தோடு சேரும் என்ப‌தை உண்மைப்ப‌டுத்த‌வா?..

  ReplyDelete
  Replies
  1. சரியாக கூறினீர்கள் ...

   Delete
 5. இந்த ரணகளத்திலயும் ஒனக்கு ஒரு கிளுகிளுப்பு கேக்குது.

  ReplyDelete
 6. School and Colleage eruvarukkum Girls kum Female Teachersum Boyskkum Male Teachers Posting Panuga Sir.Appathan Engaium Thappu Irukka Vaippu ila Sir.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி