அரசு ஊழியர் ஓய்வு வயது குறைக்கப்படுமா? - kalviseithi

May 30, 2021

அரசு ஊழியர் ஓய்வு வயது குறைக்கப்படுமா?

 

அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை பழையபடி மாற்ற வேண்டும்' என, தமிழ்நாடு வேலையில்லா பட்டதாரிகள் நலச்சங்கம், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 


சங்கத்தின் தலைவர் சோமசுந்தரம், செயலர் முகேஷ் ஆகியோர், தலைமை செயலர் இறையன்புவுக்கு அனுப்பியுள்ள மனு:வேலைவாய்ப்பற்ற லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் குறித்து கவலைப்படாமல், அ.தி.மு.க., ஆட்சியில், கடைசி நேரத்தில், அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58ல் இருந்து 59; பின் 60 என உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டது. இதனால், அரசு வேலையை எதிர்பார்த்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவு தகர்ந்துள்ளது


ஏற்கனவே, பதவி உயர்வு தேக்க நிலையில் இருந்த அரசு ஊழியர்களின் பதவி உயர்வு பறிபோனதால், அவர்களும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.இந்தியாவில் ஒரு சில மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்கள் அனைத்திலும், ஓய்வு வயது 58 ஆகவே உள்ளது. தற்போது, 60 வயதில் ஓய்வு என்ற உத்தரவால் 2020, 2021ல் ஓய்வு பெற்றிருக்க வேண்டிய, ஆயிரக்கணக்கான ஊழியர்கள், அடுத்த ஆண்டு ஒட்டு மொத்தமாக ஓய்வு பெறுவர். அப்போது, அரசுக்கு கடும் நிதிச்சுமை ஏற்படும்


ஓய்வு வயது நீட்டிக்கப்பட்டதால் இரண்டு ஆண்டுகளில் அவர்கள் பெறும் மாத சம்பளத்தை கணக்கு போட்டு பார்த்தால், அவர்களுக்கு கொடுக்கப்படும் ஓய்வூதிய பலன்களை விட அதிகமாகவே இருக்கும்.எனவே, தாங்கள் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை, பழையபடி 58 ஆக குறைக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது

37 comments:

 1. ஓய்வு வயது நீட்டிக்கப்பட்டதால் இரண்டு ஆண்டுகளில் அவர்கள் பெறும் மாத சம்பளத்தை கணக்கு போட்டு பார்த்தால், அவர்களுக்கு கொடுக்கப்படும் ஓய்வூதிய பலன்களை விட அதிகமாகவே இருக்கும்.எனவே, தாங்கள் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை, பழையபடி 58 ஆக குறைக்க வேண்டும்.

  ReplyDelete
 2. ஆசிரியர் தகுதித் தேர்வில் 2013,2017,2019 என அனைத்து வருடங்களிலும் வெற்றி பெற்று உள்ள அனைத்து ஆசிரியர்களையும் கலந்து தான் பணிநியமனம் செய்யப் போகிறார்கள். ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையாகக் கொண்டோ அல்லது ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற வருட சீனியாரிட்டி அடிப்படையாகக் கொண்டோ பணிநியமனம் பணிநியமனம் செய்யப் போவதில்லை
  2013,2017,2019 அனைவரையும் கலந்து பி.எட் எம்பிளாயிமென்ட் சீனியாரிட்டி அடிப்படையாகக் கொண்டு பணிநியமனம் செய்யப் போகிறார்கள் என்று தெரியவருகிறது
  பி.எட் எம்பிளாயிமென்ட் சீனியாரிட்டி (ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே)
  தமிழ்
  SC- 02/07/1996
  ST- 19/07/2007
  BC - 13/07/1989
  BCM -22/05/1995
  MBC -08/07/1986
  ENGLISH
  SC- 15/03/2007
  SCA- 30/08/2007
  BC - 11/12/1986
  BCM -12/05/2004
  MBC -24/07/2007
  MATHS
  SC- 27/06/2007
  BC - 14/08/1991
  BCM -23/04/2001
  MBC -13/08/1991
  PHYSICS
  SC- 04/09/2002
  SCA- 09/12/2009
  BC - 17/08/1988
  BCM -30/09/1992
  MBC -25/06/1990
  CHEMISTRY
  BC - 29/08/1988
  BCM -07/09/1992
  MBC -10/06/1991
  HISTORY
  SC- 22/01/1993
  SCA- 03/09/2007
  BC - 24/04/1987
  BCM -07/01/1993
  MBC -29/06/1980
  BOTANY
  SC- 06/05/1996
  BC - 07/04/1987
  BCM -04/05/1993
  MBC -13/08/1991
  ZOOLOGY
  SC- 22/02/2010
  SCA- 19/09/2008
  BC - 11/07/1984
  BCM -01/08/1981
  MBC -18/08/1988
  இந்த சீனியாரிட்டி அடிப்படையாகக் கொண்டு இதன் பின்னர் உள்ளவர்களுக்கு ஆசிரியர் பணிநியமனம் VACANCY படி பணிநியமனம் நடைபெறும். இதில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை அளிக்கப்படும். இதில் சிறிது மாற்றம் இருக்கும்.
  அந்தந்த major subject la tet pass pannavankalukku mattum மேற்கண்ட சீனியாரிட்டிக்கு பின்னர் உள்ளவர்களுக்கு ஆசிரியர் பணிநியமனம் நடைபெறும்

  ReplyDelete
  Replies
  1. Vaipellai Rasaa vaipellai

   Delete
  2. ஆமாம்.இவருதான் education minister

   Delete
  3. நண்பா. தமிழ் 220 புவியியல் 385 இதை தவிர்த்து மற்ற அனைத்து பாடங்களிலும் உபரி ஆசிரியர்கள் அதிகம் குறிப்பாக கணிதம் மற்றும் ஆங்கிலம். அதிர்ஷ்டவசமாக பணி நியமனம் நடந்தாலும் தமிழ், புவியியல் பாடங்களுக்கு மட்டுமே நடக்கும் அதற்கும் வாய்ப்புகள் குறைவே. இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் சுமார் 4600 காலியிடங்கள். பணியிடம் நிரப்பு வதாக இருந்தால் அரசு இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை மட்டும் நிரப்பும் அதுவும் இன்னும் 3 ஆண்டுகள் கழித்து தான். பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உபரியாக இருப்பதால் இன்னும் 6 முதல் 7 ஆண்டுகள் கழித்து தான் காலி பணியிடங்களே ஏற்படும் அதுவும் 2002,2004,2006ல் பணி நியமனம் பெற்றவர்கள் ஓய்வு பெறுவதால் ஆகவே ஆசிரியர் பணியை மட்டும் நம்பாமல் பிற போட்டி தேர்வுகளில் கவனம் செலுத்தி வென்று அரசு பணியாளர் ஆக வாழ்த்துகள்.

   Delete
  4. Super Decision. If it happened it will the right justice to the people who completed their UG in non semester pattern before 2002 and B.Ed under Madras University and respective universities. Our period we suffered a lot to get 50% in B.A English Literature in Madras University and 60% in B.Ed under Madras University. But now the universities in Tamilnadu following semester pattern and 25 marks internal in every subject. Now the youngsters getting 60% above in UG is very easy. But these TET passed candidates r simly ignoring our difficulties. The Government also not considering our problems.. God only knows our sufferings...

   Delete
  5. @English teacher
   Idha sonna evanum keka maatraan, Nagamuthu nu oru judge.... Andha nalla மனுஷன 2013 டெட்காரன் மறக்கவே மாட்டாங்க...

   Delete
  6. Dei posting pottu 8 years Achu appo lam yarum retirement agaliya ini than avangala pongada dei evlo nal than ubari nu akki yenathuvinga
   Yaru intha details a ungalukku sonnanga

   Delete
  7. Madesan sir 2014 லிருந்து ஒருத்தர் கூட பணி நிறைவு செய்ய வில்லை யா? கொரானாவால் 10 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்க்க வில்லை னு கூறுகிறீர்கள்? நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?

   Delete
  8. நண்பா சொற்ப அளவிலேயே பணி ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கை உள்ளது. இப்போது பணி ஓய்வு வயது இரண்டாண்டு நீட்டிக்கப்பட்டு விட்டது 58 வயதில் இருந்து 60 ஆக. இதன் காரணமாக இரண்டாண்டுகள் தேக்கநிலை. 10 லட்சம் பேர் சேர்ந்தாலும் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. பள்ளி திறந்த பின்னர் தான் மாணவர்களின் எண்ணிக்கை துறையிடம் சமர்பிக்கப்பட்டு பின்னர் காலியிடங்கள் கணக்கிடப்பட்டு நிரப்பப்படும். பெற்றோர்களின் தற்போதைய மனநிலை பள்ளி இல்லை தனியார் பள்ளியில் ஏன் தண்டமா பீஸ் கட்டணும் னு நிறைய பெற்றோர் அரசு பள்ளியில் சேர்த்துள்ளனர் . பள்ளிகள் திறந்தால் இவர்களின் மனநிலை மாற வாய்ப்புண்டு. மனநிலை மாறாமல் இருந்தால் எனக்கு மிக்க மகிழ்ச்சி நிறைய பேர் அரசு பணி பெறுவர் நிறைய குடும்பங்கள் நிம்மதி பெறும். குறிப்பாக பணி பெறுபவர் முதல் தலைமுறை பட்டதாரிகள் என்றால் இன்னும் சிறப்பு. நல்லதே நடக்கட்டும்.

   Delete
 3. மதிப்பிற்குரிய ஐயா வணக்கம் 🙏🙏
  நான் ஆசிரியர் தகுதித் தேர்வில் 2017ஆம் தேர்ச்சி பெற்றேன்.நான் அனைத்து கல்வி தகுதியையும் தமிழ் வழியில் பயின்றுள்ளேன்.
  ஆசிரியர் தகுதி தேர்வு 2013,2017,2019 என அனைத்து வருடங்களிலும் வெற்றி பெற்று உள்ள அனைத்து ஆசிரியர்களையும் கலந்து பணிநியமனம் செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம் . ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையாகக் கொண்டோ அல்லது ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற வருட சீனியாரிட்டி அடிப்படையாகக் கொண்டோ பணிநியமனம் செய்யாமல்
  2013,2017,2019 அனைவரையும் கலந்து பி.எட் எம்பிளாயிமென்ட் சீனியாரிட்டி அடிப்படையாகக் கொண்டு பணிநியமனம் செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.
  பி.எட் எம்பிளாயிமென்ட் சீனியாரிட்டி அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணிநியமனம் VACANCY படி பணிநியமனம் நடைபெறும்.

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்காக வருத்தப்படுகிறேன்.

   Delete
  2. Sir plz put ur quest to CM grievence website,,, CM sir will give solution

   Delete
 4. 2013,2017,2019 அனைவரையும் கலந்து பணி நியமனம் நடைபெற எனக்கு தெரிந்த முறையை கூறுகிறேன்.சரி என்றால் ஏற்றுக்கொள்ளுங்கள் .மேலும் கருத்தை தெரிவிக்கலாம்.நன்றி.

  TET YEAR SENIORITY- 10 MARKS

  1-3=3 MARKS
  3-6=6 MARKS
  6-10=10 MARKS

  EMPLOYMENT SENIORITY( B.ED OR D.T.ED)- 10 MARKS

  1-2=2 MARKS
  2-4=4 MARKS
  4-6=6 MARKS
  6-8 =8 MARKS
  8-10& ABOVE= 10 MARKS

  TET MARK -80 MARKS

  EXAMPLE:
  2019 CANDIDATE:
  TET YEAR SENIORITY MARK-(3)
  EMPLOYMENT SENIORITY MARK -(8)
  TET MARK
  95/150%=63.33
  63.33% *80 = (50.66)

  TOTAL WEITAGE :
  3+8+50.66= (61.66)

  இது ஒரு மாதிரி முறை மட்டுமே.

  ReplyDelete
  Replies
  1. TET passed year ku preference kudukka kudathuuu.... Case poduvom. 2017 2019 year passed candidates.

   Delete
  2. நீங்க ஒன்னு செய்யலாம் முனியப்பன்.. IAS IAS னு ஒரு exam நடக்கும் அதுல நீங்க பாஸ் பண்ணிட்டு கல்வித்துறை கல்வித்துறை னு ஒரு department இருக்கு அதுக்கு நீங்க ஆணையரா வந்தால் நீங்க சொல்ரது நடக்க ஒரு வாய்ப்பு இருக்கலாம்.. ஆனா இப்போ வாய்ப்பே இல்லை.. 30 நாட்களில் புதிய GO வரும்.. அதுவரை அமைதி காக்கவும்... 🙌

   Delete
  3. நன்றி நண்பரே.
   30 நாட்களில் வரும் புதிய GO பற்றி கூறுங்கள் .
   நன்றாக இருக்கும்.
   மற்றவர்களுக்கும் ஒரு நம்பிக்கை வரும் .

   Delete
 5. சரியாக இருக்கிறது ஐயா. ஆனால்,சீனியாரிடி குறைவாக இருப்பவர்கள் குறைந்தது 120 மதிப்பெண்களாவது TETல் பெற வேண்டியிருக்கும்..

  ReplyDelete
 6. நன்றி நண்பரே
  இந்த முறையினால்

  தேர்வாளர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் காத்திருப்பு காலம் இரண்டிற்கும் மதிப்பு கிடைக்கும்.

  மேலும் புதிய தலைமுறை, பழைய தலைமுறை என்ற பாகுபாடு இல்லை .
  அவரவர் திறமைக்கு வேலை.
  நன்றி .

  ReplyDelete
  Replies
  1. 90% Tet mark.10% Employment seniority. Course pass panna year. Not tet passed year.

   Delete
  2. மிகவும் சரி ஐயா.

   Delete
 7. sss oru vadai 4rs.irandu itly10rs. So total weitage 14rs

  ReplyDelete
 8. Weitage sonnala vaila vithiyasama varuthu

  ReplyDelete
 9. நாகமுத்து-னு ஒரு ஜட்ஜ்...
  ரேஞ்சு வெய்ட்டேஜ் தப்புனு சொன்ன மகான்...
  Formula வெய்ட்டேஜ் சரினு சொன்ன தெய்வம்...
  80 மார்க் வெய்ட்டேஜ் முதல் method ல எடுத்தவன் 68.92ல 2nd methodல
  வெளியேறிட்டான்... ஒரே நேரத்துல எழுதற எக்ஸாம்ல
  சம போட்டி இருக்கும்....
  பழைய ஜாதகத்தை நோண்டனா ...
  என்னை கேட்டா 2மே வேஸ்ட் method 😄😄😄

  ReplyDelete
 10. என்ன ஒரு கருத்துகணிப்பு. அபுபறம் எதுக்கு தகுதித்தேர்வு. 1986 இருக்கும் போது 40 வயதான 2013 எங்கங்க போறது . 2013 (2017 2019) நேற்று முடித்தவர்கள் வேலைக்குப் போகனும் 13ல pass பன்னுனவங்க pending ல யே இருக்கனுமா இத என்ன நியாயம் .அதுவும் B.ed சீனியாரிட்டியா என்ன ஒரு நல்ல எண்ணம் 100மதிப்பெண் எடுத்து pass பன்னிட்டு வீட்டோட இருக்கனும் 82 எடுத்து pass பன்னிட்டு சீனியாரிட்டியில‌போகனும் ரொம்ப நல்லவங்கப்பா நீங்க

  ReplyDelete
  Replies
  1. 90% TET Mark. 10% Employment seniority. Is the best way.

   Delete
  2. 13 seniority September or October oda mudunjudum apran ivanunga tholla irukkathu apram entha method la pottalum pirachana panna mattanga 17 and 19 gang appo than posting pouvanga

   Delete
 11. Only சீனியாரிட்டி அடிப்படையில் வேலை வாய்ப்பு குடுக்க வேண்டும்

  ReplyDelete
 12. Seniority only is not good method.

  ReplyDelete
 13. All are ready to competitive exams for posting

  ReplyDelete
 14. Thank you so much Love your blog.. betano bonus

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி