கல்வித்துறையில் ஊழல் தடுக்கும் புதிய சீர்திருத்த முறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 20, 2021

கல்வித்துறையில் ஊழல் தடுக்கும் புதிய சீர்திருத்த முறை


பள்ளிக்கல்வித்துறை இயக்குனரிடம் குவிந்துள்ள அதிகாரங்களை, கமிஷனர் பதவியில் உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு வழங்கி, மேற்கொள்ளப் பட்ட புதிய சீர்திருத்த முறைக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.


தமிழகத்தில், புதிய அரசு பொறுப்பேற்றதும், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அதிகாரத்தை குறைக்கும் வகையில், கமிஷனர் பணியிடம் உருவாக்கி, ஐ.ஏ.எஸ்., அதிகாரியான நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கு, ஆசிரியர்கள் சங்கத்தில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பினாலும், கல்வியாளர்கள் மத்தியில் வரவேற்கத்தக்க ஒன்றாக கருதப்படுகிறது.குறிப்பாக, குரூப் 1 தேர்வெழுதி, மாவட்ட கல்வி அலுவலராக நேரடியாக நியமனம் செய்யப்படுபவரே, முதன்மை கல்வி அலுவலர், இணை இயக்குனர்களாக பணிப்புரிந்த பின், இயக்குனராக பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.


இயக்குனருக்கு நிர்வாக ரீதியிலான அனுபவம் உள்ளதால் இப் பணியிடத்தின் அதிகாரங்களை, கமிஷனருக்கு வழங்க கூடாது என்பதே, ஆசிரியர் சங்க உறுப்பினர்களின் வாதமாக உள்ளது.ஆனால், இந்நடைமுறை தான், ஊழலுக்கு துணை நிற்பதாகவும், எவ்வித அதிரடி முடிவுகளும் எடுக்க முடியாத நிலைக்கு, சில நேர்மையான அதிகாரிகள் தள்ளப்படுவதாகவும் கருத்து எழுந்துள்ளது.


பெயர் வெளியிட விரும்பாத முதன்மை கல்வி அலுவலர் ஒருவர் கூறுகையில்,'மாவட்ட அளவில் முறையாக பணிபுரியாத ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்தால், சில சங்க உறுப்பினர்கள், மேலதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதால், எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடிவதில்லை.கமிஷனர் பணியிடத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரியை நியமித்திருப்பது வரவேற்கத்தக்கது. கமிஷனர் பதவியில் உள்ள அதிகாரி, இயக்குனர், இணை இயக்குனர்களுடன் மட்டுமல்லாமல், முதன்மை கல்வி அலுவலர்களுடனும், ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும்.ஒளிவுமறைவற்ற நிர்வாகம் இருந்தால் தான், பள்ளிக்கல்வித் துறைக்காக ஒதுக்கப்படும், பல ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட், முறையாக செல வழிக்கப்படும்' என்றார்.

12 comments:

  1. Please give posting for those who all are completed their DTED and waiting for long in Employment Office

    ReplyDelete
    Replies
    1. TET passed candidates ke innum job podala.... Ithula nee vera...poi vera velaiya paaru....1st TET clear pannu...

      Delete
    2. Tet cancel panni seniority padi posting poda vendum enni tamilnaduku tet exam thevai ellai.Admk Teacher panna Kodmaiyellam enni parthu summa eruka mudiyathu,palaiya padi seniority kondu vara Vendum enpathae teacher virupam.

      Delete
  2. தொடக்க கல்வி துறையில் ஆசிரியர்கள் பெற்ற மேற்படிப்பு பட்ட சான்றிதழ்கள் கடுமையாக சோதனை செய்யப்பட வேண்டும். தேர்வு எழுதாமலும் பணம் கொடுத்தும் வாங்கிய சான்றிதழ்கள் மூலம் பதவி உயர்வு பெற்றவர்களின் ஆட்டம் ஓவராக உள்ளது.

    ReplyDelete
  3. முறைகேடுகளுக்கு உதாரணம்...
    1. அதிகபட்சமாக, ஆசிரியரல்லா பணிமாறுதலுக்கு ஆசிரியர் பணியிட மாறுதலுக்கு இணையாக இலஞ்சம் கோரப்படுகிறது. பணியிடை நீக்கம் தீர்வாகாது. சொத்துகள் பறிமுதல் நிரந்தர பணிநீக்கம் மட்டுமே முழுத் தீர்வாக அமையும்.
    2. குறைந்தபட்சமாக, மாற்றுப்பணி (Deputation) என்ற பெயரில் உயர்நிலை அலுவலகங்களில் சார்நிலை அலுவலக பணியாளர்களின் உழைப்பு உறிஞ்சப்படுகிறது. வேலை செய்ய திறனற்ற பிறவிகளுக்கு கட்டாய பணி ஓய்வு வழங்குவதுடன் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

    ReplyDelete
  4. எதற்காக பள்ளிக்கு வருகிறோம் என்பதை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் உணராதவரை எத்தனை சீர்திருத்தங்கள் கொண்டு வந்தாலும் செலவு செய்தாலும் அவையெல்லாம் வீண்தான்.

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள் நண்பா

      Delete
  5. சுதந்திர போராட்ட தியாகி எங்கள் தாத்தா என பல பேர் D T ed படித்து வேலையில் இருந்து வருகிறர்கள்

    ReplyDelete
  6. 2013ku 8000vacancy first fill pnnunga sir im woting

    ReplyDelete
  7. TRB PGTRB Economics court case bending sir please update sir

    ReplyDelete
  8. Special teacher pending posting pathi thagaval therinja sollunga. Case mudinjita,,,,court case ellam mudinjatha

    ReplyDelete
  9. 2009-2010-ல் பதிவு மூப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிமாற்றத்தின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட பெயர் பட்டியலை மீண்டும் வெளிக்கொண்டுவந்து எங்களது
    வாழ்வுக்கும் ஒரு வழி காட்டுங்கள் சார் இந்த ஆசிரியர் பணிவரன் முறைஇன்மையால் நிறைய படித்த ஆசிரிய பெருமக்கள் பாதிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள் அதுவும் கடந்த பத்தாண்டில் மிகவும் பாதிக்கப்பட்டுவிட்டோம்
    இதற்கு ஓர் தீர்வு நீங்கள் தான் கூறவேண்டும் என்று தங்களை கேட்டுக்கொள்கிறேன் நன்றி சார்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி