பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்க தடை... தமிழக அரசு உத்தரவு..! - kalviseithi

May 8, 2021

பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்க தடை... தமிழக அரசு உத்தரவு..!

 


தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டது. 


ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து 12ஆம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.


அதன் பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியதால் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


அதன் படி பொதுமக்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா தலங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் யாரும் செல்லக்கூடாது. ஊரடங்கு போது பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி கோவில் திருவிழாக்கள் நடத்தவும் தடை விதித்துள்ளது.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி