தமிழகத்தில் மேலும் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் விதிப்பு - தமிழக அரசு - kalviseithi

May 4, 2021

தமிழகத்தில் மேலும் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் விதிப்பு - தமிழக அரசு


கொரனா பரவலை கட்டுப்படுத்த மேலும் புதிய கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு உத்தரவு. 


*✅மே-6 ம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்:


*✅ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்


*✅ஊரகம் மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி இல்லை.


*✅இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட் சனி, ஞாயிறு கிழமைகளில் திறக்க அனுமதியில்லை.


*✅நண்பகல் 12 மணிவரை மட்டுமே தேநீர் கடைகள் செயல்பட அனுமதி.


*✅அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்களில் 50 சதவீதம் ஊழியர்களுடன் செயல்பட அனுமதி.


*✅மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழக்கம் போல் செயல்படலாம்.


*✅காய்கறி, பலசரக்கு, பழ கடைகள் குளிர்சாதன வசதியின்றி பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்.


*✅ரயில், மெட்ரோ, தனியார் , அரசு பேருந்துகளில் 50 சதவீதம் இருக்கைகளில் மட்டுமே பயணிகளுக்கு அனுமதி.


*✅ஐடி நிறுவனங்களில் இரவுப்பணி மேற்கொள்ள அனுமதி.


*✅உணவகங்களில் பார்சல் சேவை மட்டுமே வழங்க அனுமதி.


*✅பெட்ரோல், டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.


*✅திருமண நிகழ்வுகளில் 50 பேர் பங்கேற்கலாம். இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 20 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி.


*✅சமுதாயம், அரசியல், கல்வி மற்றும் பொழுதுபோக்கு, இதர விழாக்கள் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்த தடை.


*✅திறந்த வெளி மற்றும் உள் அரங்கங்களில் விழாக்கள் நடத்தவும் அனுமதி இல்லை.


*✅மளிகை மற்றும் காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் திறக்க அனுமதி இல்லை.


*✅நோய் பரவலை கட்டுப்படுத்த மாஸ் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளையும் அனைவரும் பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி