அரசுக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் விரைவில் பணி நிரந்தரம்: அமைச்சர் பொன்முடி தகவல் - kalviseithi

May 20, 2021

அரசுக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் விரைவில் பணி நிரந்தரம்: அமைச்சர் பொன்முடி தகவல்

 

அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் யுஜிசி தகுதி மற்றும் சீனியாரிட்டி  அடிப்படையில் முறையாகப் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துச் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பொன்முடி அளித்த பேட்டி:

''புதிய கல்விக் கொள்கை குறித்து ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் அது மாநில உரிமைகளில் தலையிடுவது. அதை ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் எதிர்த்து வருகிறோம். தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதே புதிய கல்விக் கொள்கை  குறித்து ஒரு குழுவை நியமித்தார். நானும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசும் சேர்ந்து கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி அதில் உள்ள குறைகளை வெளியிட்டு இருக்கிறோம்.

அந்த அடிப்படையில் நிச்சயமாகப் புதிய கல்விக் கொள்கை தமிழ்நாட்டுக்குள் நுழைய முடியாது. முதல்வர் ஆலோசனையின்படி உயர் கல்வித்துறை அமைச்சராக நானும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் துறை ரீதியாக நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்.

அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று தவறுதலான முறையில் கடந்த ஆட்சிக் காலங்களில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அவை எதையும் நம்பி சம்பந்தப்பட்டவர்கள் ஏமாற வேண்டாம். முதல்வருடன் கலந்து பேசி, உயர் கல்வித் துறைச் செயலருடன் ஆலோசித்து, முறையாகப் பணி நிரந்தரம் செய்ய உள்ளோம்.

யுஜிசி தகுதி மற்றும் சீனியாரிட்டி  அடிப்படையில் கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம்  செய்யப்படுவார்கள். இதில் தரகர்களின் குறுக்கீட்டை யாரும் நம்ப வேண்டாம். இந்த விவகாரத்தில் தனிப்பட்ட வகையில் பணம் பெறுபவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்''.

இவ்வாறு அமைச்சர் பொன்முடி  தெரிவித்தார்.

15 comments:

 1. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

  ReplyDelete
 2. அரசு கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார் என்றால் ,அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்ற வாய்ப்பு கிடைக்காமல் net ,set முடித்தவர்களுக்கு இந்த அரசிடம் என்ன பதில் இருக்கிறது ? கடைநிலை ஊழியர் முதல் IAS வரை போட்டி தேர்வு வைத்து தேர்ந்தெடுக்கிறார்கள் .கல்லூரி விரிவுரையாளர்களுக்கு மட்டும் ஏன் விதி விலக்கு ?

  ReplyDelete
  Replies
  1. Ur correct sir exam is the best solution

   Delete
  2. You are correct we need exam for this..

   Delete
  3. ATHA THAN SEENIYARITY NU SOLRAR NANBA

   Delete
 3. அந்த காணொளியை மறுபடியும், மறுபடியும் பாருங்கள். அவர் கவுரவ விரிவுரையாளர் பணி நிரந்தரம் குறித்து பேசவில்லை. பொது டிஆர்பி குறித்தே பேசுகிறார். உற்று கவனியுங்கள் புரியும்

  ReplyDelete
 4. 2012-13 tet passed candidates status

  ReplyDelete
  Replies
  1. Certificate dead aga pothu

   Delete
  2. Vacancy only in Geography(Social science) nearly 350 and tamil nearly 140 other subjects surplus mainly English, Maths subjects. SG paper 1 nearly 4600 vacancies. Dear friends pls prepare above major candidates other go Tnpsc, RRB, SSC Side. Be practical, don't waste ur time and energy.... 9500+ BT posts already EXCESS so no vacancy

   Delete
 5. 10 வருடங்களுக்கு முன்பு hour basis ,ஒரு பாட வேலைக்கு ,என குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் போது தாங்கள் எங்கே சென்றிர்கள் ..அப்போது இதே கேள்வியை கேட்க வேண்டியதுதானே .........15 ஆண்டுகளாக GL ஆக உழைத்து 50 வயதை நெருங்கும் நாங்கள் அரசை கேட்காமல் என்ன செய்வது...............

  ReplyDelete
  Replies
  1. அதே வேளையில் தனியார் கல்லூரியில் வேளை செய்த விரிவுரையாளர்களுக்கும் உங்களைவிட குறைவான சம்பளம் தான் வாங்கினர், பல கட்டுப்பாடு, அதிக வேலை பளு உங்களைக் காட்டிலும் மிகவும் கஷ்டப்பட்டு இருந்தனர் இருக்கின்றனர். அன்பரே

   Delete
 6. Dmk exam vaikkamattargal mela commentsla katharathingada

  ReplyDelete
 7. part time job teachers can not claim for permanent job. its the rule accepted by those teachers at the time of joining. you know salary is very low and its hour basis. then how do u claim permanent job? what about teachers working in private colleges and schools?
  don't they deserve govt post?? what nonsense is this. we all go till supreme court against this.

  ReplyDelete
 8. Written exam best. Example nearest state in Andra pradesh.

  ReplyDelete
 9. TRB is the right way to choose Teachers and Lectures in govt. schools and colleges

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி