இ பாஸ் அல்ல -இ பதிவு: தமிழக அரசு விளக்கம்! - kalviseithi

May 16, 2021

இ பாஸ் அல்ல -இ பதிவு: தமிழக அரசு விளக்கம்!

வரும் மே 17ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையிலுமான போக்குவரத்துக்கு இ பாஸ் தேவையில்லை என்றும், இ ரிஜிஸ்டர் வேறு, இ பாஸ் வேறு என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.


தமிழக அரசு நேற்று இரவு மீண்டும் வெளியிட்ட அறிவிப்பில்,

“ மாவட்டங்களுக்கு இடையில் மாவட்டங்களுக்குள் பயணிக்க இ பாஸ் பெற்று பயணிக்க வேண்டும் என்று தவறுதலாக செய்தி பரப்பப்படுகிறது. மாறாக மாவட்டங்களுக்குள், மாவட்டங்களுக்கு இடையில் அத்தியாவசிய பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு, வேலைவாய்ப்பு போன்றவற்றுக்கு பயணம் செய்யும் பொதுமக்கள் தங்களது ஆவண ஆதாரங்களை https://eregister.tnega.org இணையதளத்தில் இ-பதிவு செய்து, இ பதிவு மேற்கொண்டதற்கான ஆதாரத்தை வைத்துக் கொண்டு எவ்விதமான தடையின்றி தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது”என்று அந்த விளக்கத்தில் அரசு தெரிவித்துள்ளது.


அதாவது இ பாஸ் என்றால் இணையத்தில் விண்ணப்பித்து அரசின் ஒப்புதல் பெற்ற பிறகே பயணிக்க வேண்டும், ஆனால், இ பதிவு என்றால் இணையத்தில் பதிவு செய்து அதன் ஆவணத்தை வைத்திருந்தாலே போதும். அரசின் ஒப்புதல் பெற தேவையில்லை என்பதுதான் இந்த அறிவிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி