ஜாக்டோ-ஜியோ சார்பில் கொரோனா நிவாரண நிதியாக ஒரு நாள் ஊதியம் வழங்க முடிவு. - kalviseithi

May 11, 2021

ஜாக்டோ-ஜியோ சார்பில் கொரோனா நிவாரண நிதியாக ஒரு நாள் ஊதியம் வழங்க முடிவு.

 


தமிழகத்திலுள்ள ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் பணியாளர்களின் கோரிக்கைகளை கனிவுடன் பேச்சுவார்த்தை மூலம் நிறைவேற்றுவதற்கான அரசு , நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளது. மாண்புமிகு தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள உயர்திரு ஸ்டாலின் அவர்களுக்கு ஜாக்டோ ஜியோ மீண்டும் தனது நெஞ்சார்ந்து வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. 


தற்போது இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் மிக உக்கிரமாக உள்ளது. இந்திய அரசும் தற்போது மக்களின் அறுதிப் பெரும்பான்மையோடு அரியணையில் அமர்ந்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தமிழக அரசும் கொரோனாவினைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளன. அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முன்களப் பணியாளர்களோடு தமிழகத்தில் அனைத்துத் துறைப் பணியாளர்களும் ஒருங்கிணைந்து செயலாற்றி வருகின்றனர். இந்திய அரசிற்கும் அந்தந்த மாநில அரசுகளுக்கும் இந்த நோயினை எதிர்கொள்வதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு போதிய நிதி ஆதாரங்களை திரட்ட வேண்டிய நிலை உள்ளது. இத்தகைய ஒரு அசாதாரணமாக சூழ்நிலையில் , தமிழகத்திலுள்ள 12 இலட்சம் ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் பணியாளர்கள் , சிறப்புக் காலமுறை சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு - அங்கன்வாடிப் பணியாளர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ ஒருநாள் ஊதியத்தினை கொரோனா நோய் தொற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தமிழக அரசிற்கு வழங்க முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி