ஓட்டுநர் உரிமம் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் தனியாக ஓட்டுனர் சோதனையில் பங்கேற்க தேவையில்லை என்கிற உத்தரவு ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அங்கீகாரம் பெற்ற ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் பயிற்சிக்கான சான்றிதழ் பெற்றால், ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஓட்டுனர் உரிமம் பெற வேண்டுமென்றால், ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் தனியாக ஓட்டுனர் சோதனையில் பங்கேற்க வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றால்தான் ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும். தற்போது, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் புதிய நடைமுறை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் ஓட்டுனர் பயிற்சியை முடித்தவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் தனியாக ஓட்டுனர் சோதனையில் பங்கேற்க தேவையில்லை. இந்த புதிய நடைமுறை ஜூலை 1-ந்தேதியில் இருந்து நடைமுறைக்கு வர இருக்கிறது.
மிகவும் வரவேற்கத்தக்கது
ReplyDeleteஅருமை
ReplyDelete