தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வு 100% ரத்து செய்யப்படும் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் - kalviseithi

Jun 27, 2021

தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வு 100% ரத்து செய்யப்படும் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்

 

தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வு 100% ரத்து செய்யப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 5,415 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். கொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில் செய்யப்பட்ட அளவிற்கு பரிசோதனைகள் தற்போது செய்யப்படுகின்றன. தினமும் 1.30 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 36வது நாளாக ஒருநாள் கொரோனா மொத்த பாதிப்பு குறைந்து வருகிறது. மேற்கு மண்டலத்தை சேர்ந்த 9 மாவட்ட மருத்துவர்கள் உடன் காணொலியில் ஆலோசிக்கப்பட்டது.


மகப்பேறு பரிசோதனைக்கு வரும் தாய்மார்களுக்கு யோகா, மூச்சுப்பயிற்சி வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். மேலும், விரும்பிய தேதியில் குழந்தை பிறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிசேரியன் செய்வது அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஏற்படுவதற்காக பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவசியம் இருந்தால் மட்டுமே சிசேரியன் செய்யப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், விருப்பத்தின் பேரில் சிசேரியன் செய்வது ஏற்கத்தக்கது அல்ல. இதனால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கும் என்றும், மேலும், சுகப்பிரசவத்தில் குழந்தை பெறுவதற்கு ஊக்குவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வு 100% ரத்து செய்யப்படும். மாணவர்கள் பயிற்சிக்கு செல்வதை தடுத்து ஒருவேளை காலதாமதம் ஏற்பட்டால் எதிர்காலம் பாதிக்கப்படும். நீட் எதிர்ப்பு தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு சென்றால் அது ஒப்புதலோடுதான் திரும்ப வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

5 comments:

 1. முடியாத காரியம்.

  ReplyDelete
 2. விளையாட வேண்டாம்

  ReplyDelete
 3. சங்கிகளின் நீட் தேர்வு முற்றிலும் ரத்து. ஆனால் நாங்கள் கையெழுத்து போட்ட மருத்துவ தகுதி தேர்வு சட்ட மசோதா அடிப்படையில் தேர்வு நடைபெறும்.(நவீன நீட்). ஆகவே மாணவர்கள் எந்த குழப்பமும் இல்லாமல் தைரியமாக இருக்கலாம்.

  ReplyDelete
 4. உங்களுக்கு ஓட்டு போட்ட குருப்பை சொல்லவேண்டும். அவர்கள் மட்டும் ஜனநாயகப் படி ஒட்டுட்டால் இப்போது பேசி இருக்க மாட்டீர்கள்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி