அசத்தும் ஆசிரியர்கள் அரசு பள்ளியில் சேர்ந்தால் ₹1,000 ஊக்கத்தொகை - kalviseithi

Jun 28, 2021

அசத்தும் ஆசிரியர்கள் அரசு பள்ளியில் சேர்ந்தால் ₹1,000 ஊக்கத்தொகை

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே காமயகவுண்டன்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு தற்போது மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில், 6ம் வகுப்பு சேரும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சார்பில் ₹1,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. ஆசிரியர்களின் இச்செயலுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் நடந்த மாணவர் சேர்க்கை நிகழ்ச்சியில் பொறுப்பு தலைமை ஆசிரியர் வீரமணி,  முதுகலை ஆசிரியர்கள் மாதவன், ராஜா, பட்டதாரி ஆசிரியர் ஷபி அகமது, ஆசிரியை ராதிகா ஆகியோர் கலந்துகொண்டனர்.


ஆசிரியர்கள் கூறுகையில், ‘‘கொரானா காரணமாக பெரும்பாலான பெற்றோர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். இந்த சூழ்நிலையிலும் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் அவர்களை ஊக்குவிப்பதற்காக நாங்கள் ₹1,000 வழங்குகிறோம். இதன் மூலம் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்’’ என்று தெரிவித்தனர்.

3 comments:

 1. ஆனால் உங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்த்துக்கொள்ளுங்கள்

  ReplyDelete
  Replies
  1. இதை சொல்றதுக்குனே 4 பரதேசி பயலுக திருவானுக

   Delete
  2. முதல்ல உங்க பிள்ளைகள அரசு பள்ளியில் சேருங்கள்

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி