11ஆம் வகுப்பு மாணாக்கர் சேர்க்கை- 9ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் பள்ளி அளவிலான மதிப்பெண் பட்டியல் தயாரித்தல் குறித்து-வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 16, 2021

11ஆம் வகுப்பு மாணாக்கர் சேர்க்கை- 9ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் பள்ளி அளவிலான மதிப்பெண் பட்டியல் தயாரித்தல் குறித்து-வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

பள்ளிக்கல்வி- 2021 - 2022 ஆம் கல்வியாண்டிற்கு 11ஆம் வகுப்பு மாணாக்கர் சேர்க்கை- 9ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் பள்ளி அளவிலான மதிப்பெண் பட்டியல் தயாரித்தல் குறித்து-வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

பள்ளிக் கல்வியில் 10 ஆம் வகுப்பு முடித்து மேல்நிலைக்கல்வி பயில்வதற்கும் , பல்தொழில் நுட்பக்கல்லூரிகள் , ( Polytechnic Colleges ) தொழிற்பயிற்சி நிறுவனங்கள் ( Industrial Training Institutes ) மற்றும் பிற மேற்படிப்பு நிறுவனங்களில் சேருவதற்கும் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் அவசியமாகிறது . தற்போது 2021-22ம் கல்வியாண்டில் 11 ஆம் வகுப்பில் சேர உள்ள மாணவர்கள் , பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வும் 2019-2020ஆம் கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பு முழு ஆண்டுத்தேர்வும் நடைபெறாத நிலையில் 11 ஆம் வகுப்பு மற்றும் சம்பந்தப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களுக்கான சேர்க்கைப் பணிக்காக மட்டும் ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்பட்டியல் அளிக்க கீழ்க்காணும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன.

1. 2019-2020ஆம் கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு ஆகிய இரண்டு தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் எந்த தேர்வில் அவர்கள் அதிகப்படியான மதிப்பெண்ணை பெற்றுள்ளார்களோ அம்மதிப்பெண்ணை ( The maximum mark scored in each subject either in Quarterly or Half -yearly examinations ) கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்

2. காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் இரண்டிலும் கலந்து கொண்டு எந்த பாடத்தில் தேர்ச்சி பெறவில்லையோ அந்த பாடத்திற்கு குறைந்தபட்சதேர்ச்சி மதிப்பெண்கள் ( 35 ) வழங்கலாம் 

3. காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் இரண்டிற்கும் வருகை புரியாத மாணவர்களுக்கு ( Absentees ) குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்கள் ( 35 ) வழங்கலாம்

4. காலாண்டுத் தேர்வுகள் அல்லது அரையாண்டுத் தேர்வுகளில் பங்கு பெற்று ஏதேனும் ஒன்றில் மட்டும் தேர்ச்சி பெற்றிருந்தால் அந்த மதிப்பெண்ணை கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் . எனவே , மேற்குறிப்பிட்ட நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றி மதிப்பெண்பட்டியலை வழங்கி , அதனடிப்படையிலும் நடைமுறையில் உள்ள பிற விதிகளையும் பின்பற்றி 11 ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை நடத்திடுமாறு , அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர் / பள்ளி முதல்வர்களுக்கும் தெரிவித்திட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் , 2020-21ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு பயின்ற அனைத்து மாணவர்களுக்கும் பார்வை -1 ல் கண்ட அரசாணைப்படி 10 ஆம் வகுப்பிற்கான தேர்ச்சி சான்றிதழ் ( Pass Certificate ) அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் பின்னர் வழங்கப்படும்.




No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி