12ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதா? வேண்டாமா? குறித்த இறுதி முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்!: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி..! - kalviseithi

Jun 5, 2021

12ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதா? வேண்டாமா? குறித்த இறுதி முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்!: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி..!

 

12ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த வேண்டும் என்று பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்தியுள்ள நிலையில், இறுதி முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதா? வேண்டாமா? என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட 13 சட்டமன்ற கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். 

திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் பிரதிநிதிகள், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பொதுத்தேர்வை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தின. ஆனால் பாஜக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் புரட்சிபாரதம் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பொதுத்தேர்வை நடத்த வேண்டாம் என்று கருத்து தெரிவித்தன. பெரும்பான்மை கட்சிகளின் நிலைப்பாட்டை ஏற்பதாக அதிமுக தெரிவித்துள்ளது. 

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆலோசனை கூட்டத்தில் கேட்கப்பட்ட கருத்துக்களை முதலமைச்சரிடம் தெரிவிக்க உள்ளதாகவும், தேர்வு நடத்துவது குறித்து இறுதி முடிவை முதலமைச்சரே அறிவிப்பார் என்றும் கூறினார். மாலை 5:30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்து அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளார். இதையடுத்து பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முதலமைச்சர் அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5 comments:

 1. https://www.facebook.com/292134710905399/posts/4086517318133767/?d=null&vh=e

  ReplyDelete
 2. Till discuss not good I hope +2all pass is good for all health is very important 🙏

  ReplyDelete
 3. Yes cancel the exam is correct decision

  ReplyDelete
 4. All are say opinion only not take responsible for that so student life is important cancel the exam

  ReplyDelete
 5. +2தேர்வு கண்டிப்பாக் நடத்த வேண்டும் 2 மாதம் தள்ளி வைக்கலாம்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி