பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் ஜூன் 20 ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 5, 2021

பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் ஜூன் 20 ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை

 

கொரோனா 2 ஆம் அலை காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளிகளை மீண்டுமாக திறப்பது குறித்த ஆலோசனைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பள்ளிகள் திறப்பு குறித்த புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.


பள்ளிகள் திறப்பு 

நாடு முழுவதும் கடந்த ஆண்டு முதல் பரவி வரும் கொரோனா பேரலை காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள், இன்று வரை முழுமையாக திறக்கப்படவில்லை. அந்த வகையில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா பாதிப்பு வீதமானது சற்று குறைந்து வந்த நிலையில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் துவங்கியது. ஆனால் குறைந்த நாட்களே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், கொரோனா 2 ஆம் அலை தாக்கத்தினால் பள்ளிகள் மீண்டுமாக மூடப்பட்டது.


மீண்டுமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. தவிர 1 முதல் 11 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அந்த வகையில் கடந்த கல்வியாண்டை போலவே இந்த ஆண்டும் +2 மாணவர்களுக்கு தேர்வுகளை ரத்து செய்யமுடியாததால், தேர்வுகளை நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. மேலும் +2 பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலரிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது.


இதில் 60 சதவீதம் பேர் தேர்வுகளை நடத்த வேண்டும் என ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் ஜூன் 20 ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாதவர்கள் அதற்கான காரணத்தையும் கூறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மூலம் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு கூடிய விரைவில் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.8 comments:

 1. Sure will take the injection, but govt accepted frontage volunteer if anything thing happened after injection government will take care family... Because not even get the salary past 3 months private school teachers..

  ReplyDelete
 2. உத்தரவு எங்கே??

  எந்தவித ஆதாரமும் இல்லாமல் யாராவது சொல்வதையோ எழுதுவதையோ கேட்டு செய்தி வெளியிடாதாங்க...
  (தகுந்த ஆதாரத்துடன் செய்தி வெளியிடுங்கள் வதந்திகளைத் தவிருங்கள் )

  ReplyDelete
  Replies
  1. தந்தி டிவி செய்தி வீடியோ

   https://youtu.be/euopiIA5OHk

   Delete
 3. அரசு ஆணை எங்கே

  ReplyDelete
 4. Oosi poda kooda valikuthu niriya peruku

  ReplyDelete
  Replies
  1. Yes bro pain also, if u need want pls put injection, who's given right force to others ,all medical Mafia if u study well u realize otherwise...?

   Delete
 5. பால் கொடுக்கும் தாய்மார்கள் தடுப்பூசி செளுத்திக்கொள்ளளமா?

  ReplyDelete
 6. மருத்துவரிடம் கேட்க வேண்டிய கேள்வி. இது ஊரை கெடுக்கும் நாற வாயர்களுக்கான பகுதி.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி