அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 14-ந் தேதி தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 11, 2021

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 14-ந் தேதி தொடக்கம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.


கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தது. கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பல பெற்றோர் தனியார் பள்ளிகளில் சேர்ப்பதை தவிர்த்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் சேர்த்தனர்.


இதனால் சுமார் 5 லட்சம் மாணவர்கள் கடந்த ஆண்டு கூடுதலாக சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் கொரோனா 2-ம் அலை தமிழகத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.





இதனால் ஏப்ரல் மாதத்தில் நடைபெற வேண்டிய மாணவர் சேர்க்கை பாதிக்கப்பட்டது. பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதோடு அரசு, தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தடைப்பட்டது.


இந்த நிலையில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வருகிற 14-ந் தேதி முதல் தொடங்குவதற்கான நடைமுறைகளை பள்ளி கல்வித்துறை செய்துள்ளது. தலைமை ஆசிரியர்கள், ஊழியர்கள் 14-ந் தேதி பள்ளியில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் பி.கே.இளமாறன் கூறியதாவது:-


கொரோனா தொற்றின் காரணமாக மாணவர் சேர்க்கை முறையாக நடைபெறவில்லை. பாதிப்புக்கு பிறகு வருகிற 14-ந் தேதி முதல் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான ஆயத்த பணிகளை செய்ய வேண்டும். அதற்காக தலைமை ஆசிரியர், நிர்வாக ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளியில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


21-ந் தேதியில் இருந்து பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்க உள்ள நிலையில் மற்ற வகுப்புகளுக்கும் மாணவர்களை சேர்ப்பதற்கும், சத்துணவு சாப்பிடக்கூடிய மாணவர்களுக்கு அதற்கான உணவு பொருட்களை வழங்கவும், பள்ளிக்கு ஆசிரியர்கள் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டைபோல கூடுதலாக மாணவர் சேர்க்கை நடத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து பெற்றோர்களுக்கு வீடு வீடாக சென்று எடுத்துரைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி