அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியரின்றி உபரியாக உள்ள 1575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை முதுகலை ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 11, 2021

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியரின்றி உபரியாக உள்ள 1575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை முதுகலை ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு!

ஆணை : 


மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் பள்ளிக் கல்வித் துறையில் அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியிடங்கள் நிர்ணயம் செய்திட நெறிமுறைகள் வகுக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது . 


2 . மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் ஆசிரியர்களின் வேலைப்பளுவின் அடிப்படையில் வேளைகள் ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது . 


3 . தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 12.03.2020 அன்று நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறை சார்ந்த மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக் கல்வி , இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் பிறவற்றினிடையே பின்வரும் அறிவிப்பினை அறிவித்துள்ளார் : “ பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதன் காரணமாக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதை கவனத்தில் கொண்டு , மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி , 1575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக ஆண்டு ஒன்றுக்கு ரூ . 1.11 கோடி கூடுதல் செலவில் தரம் உயர்த்தப்படும் .


 " 4 . மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட கடிதங்களில் , பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்கள் 01.08.2019 அன்றைய நிலவரப்படி , மேலே ஒன்று முதல் இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணைகளின்படி மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் பாடவேளைக்கு ஏற்ப பணியாளர் நிர்ணயம் செய்வது குறித்து கணக்கீடு செய்யப்பட்டதில் , அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளுக்கு தற்போது மொத்தம் 1984 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் / உடற்கல்வி இயக்குநர் ( முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் நிலையில் ) பணியிடங்கள் கூடுதலாகத்


GO NO 18 , Date : 01.02.2021 - Download here.


CLICK HERE TO DOWNLOAD-SCHOOL NAME & POST LIST


19 comments:

  1. ஆசிரியர்களின்றி உபரின்னா என்ன?.

    ReplyDelete
    Replies
    1. 400 மாணவர்கள் உள்ள உயர்நிலை பள்ளியில் 10 ஆசிரியர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஏதோ ஒரு காரணத்தால் அந்த பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 200 குறைந்து விட்டால் ஆசிரியர்கள் எண்ணிக்கை 5 குறைந்துவிடும். இதைத் தான் ஆசிரியர்களின்றி உபரி என்று சொல்வார்கள்.

      Delete
  2. Sengottaiya...
    Veettukku porappa indha vela pathutu poitiya?!
    Tet Karan velaikke poga kudathunu vela pathurukka. ..
    G.o.date 01/02/2021

    ReplyDelete
    Replies
    1. Yoov innuma puriyala DMK admk rendum kuuttani dha

      Delete
  3. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள் என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அவர்களுக்கு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்

    ReplyDelete
  4. Ubari aasiriergal niraya erukirargal enray valai podavillai.but eppa ubari paniedam erukka? Athai eppo pg kku mattrinal paniedam erukkathu allava? Appo pattathari aasiriyar paniedam kuraya vaaippu errukka?

    ReplyDelete
    Replies
    1. இதிலென்ன சந்தேகம்...
      பட்டதாரி பணியிடங்கள் தாரை வார்க்கப்பட்டுவிட்டன...

      Delete
    2. கணினிக்கல்வியில் 758பணியிடம் பதவி உயர்வு,757பணியிடம் தேர்வு மூலம் பணிநியமனம் என்று அரசானை வெளியிடப்பட்டுள்ளது

      Delete
    3. Yar sonadhu pa...c.s only 39 posting pg trb...

      Delete
  5. How many of you admitted their children or encourage your family and friends to join in government school
    Then only you ask government job in government school

    ReplyDelete
    Replies
    1. Exactly said... I agree and im sure i will do it

      Delete
  6. இவங்களும் இப்படியா போங்கடா உங்க ஆசிரியர் பணியும் உங்க அரசும் பழைய குருடி கதவ தொரடீன்னு ஆச்சு 2017 Paper -1-2 pass Age-43 என்ன செய்வது வாழ்க்கை இப்படியே போயிருமா இறைவா

    ReplyDelete
    Replies
    1. Politician ethu nga nallavar kettavar ellarume oremathiri tha...

      Delete
  7. 58 to 59 , 59 to 60 னு retairment age மாத்தி விட்டதுனால நிறைய posting போட முடியாம இருக்கு .
    அவுங்களுக்கு retairment age 58 னு GO வந்தா எல்லாருக்கும் posting போட முடியும்.
    Please 58 னு age fix பண்ண சொல்லுங்க. Problem solve

    ReplyDelete
  8. இடைநிலை ஆசிரியர்களுக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கும் பல வருடங்களாக பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தாரை வார்த்தால் பிறகு எதற்கு B.ed colleges?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி