வரும் 21ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை! - சபாநாயகர் அப்பாவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 9, 2021

வரும் 21ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை! - சபாநாயகர் அப்பாவு.

புதிதாகப் பதவியேற்றுள்ள தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் வரும் 21-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 16-வது சட்டப்பேரவை, கடந்த மே 7 அன்று பதவியேற்றது. அதையடுத்து, சபாநாயகராக அப்பாவு, துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய எம்எல்ஏக்களும் பதவியேற்றனர்.

இந்நிலையில், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்தார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, ஆளுநர் உரை நிகழ்த்தும் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் குறித்து கலந்தாலோசிக்க, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது ஆளுநர், கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, முதல்வரிடம் கேட்டறிந்தார்.இந்த சந்திப்பின்போது நீர்வளத்துறை அமைச்சரும் அவை முன்னவருமான துரைமுருகன், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஜூன் 21-ம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூடும் என சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி