பிளஸ்-2 தேர்வு குறித்து பெற்றோர் தெரிவித்த கருத்து பற்றி இன்று மாலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முதல்வருடன் ஆலோசனை - kalviseithi

Jun 4, 2021

பிளஸ்-2 தேர்வு குறித்து பெற்றோர் தெரிவித்த கருத்து பற்றி இன்று மாலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முதல்வருடன் ஆலோசனை

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு குறித்து பெற்றோர் தெரிவித்த கருத்து பற்றி இன்று மாலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்துகிறார். பிளஸ் -2 பொதுத்தேர்வை நடத்தலாமா? வேண்டாமா? என்பது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள், பள்ளிகள் சார்பில் இணையதளம் வாயிலாக கருத்துகள் கேட்கப்பட்டன. இது தொடர்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமையில் நடந்த ஆலோசனையின் போது பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்களிடம் கருத்துகள் கேட்டு அதன் அடிப்படையில் முடிவு எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது. காலை 10 மணிக்கு தொடங்கி மாலை வரை கருத்துக்கள் கேட்கப்பட்டது. 

இதில் ஏராளமான மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர். குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 7 மாநிலங்களில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் -2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர். 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பிளஸ் -2 தேர்வை நடத்துவதுதான் மாணவர்களின் எதிர்காலத்துக்கு நல்லது என கூறி உள்ளனர். இது குறித்து சில ஆசிரியர்கள் கருத்து கூறுகையில், பிளஸ்-2 வகுப்பில் அனைவரும் தேர்ச்சி. ஆனால் மதிப்பெண் அதிகம் பெற விரும்பும் மாணவர்கள் தேர்வை எழுதலாம் என்கிற ஒரு முடிவை அரசு எடுத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறி உள்ளனர்.

5 comments:

 1. Compulsory ellarukkume exam nadathanum. Appo thaan future la avanga job porathukku useful ah irukkum. Ella board exam attain panna namakke innum job podala... All pass potta avlo thaan....

  ReplyDelete
  Replies
  1. College patikkum pothu pudunginaiya

   Delete
  2. Job job nu enda nai mari alairinga ean sonthama polaikka vendiyathu thana nalaikku uirooda iruppomanu theriyala ithula future maira pathi pesuran

   Delete
  3. Mmmmm nee oru luusuuuu pola...

   Delete
 2. ஐயா வணக்கம், ஆசிரியர்கள் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி கல்வித்துறையில் எந்த வேலை இருந்தாலும் தரலாம். எந்த வேலை செய்யவும் தயாராக இருக்கிறார்கள். தயவு செய்து முயற்சி எடுக்கவும். அல்லது அனைத்து ஆசிரியர்களுக்கும் 10 அல்லது 15 ஆயிரம் சம்பளத்தில் பணியமர்த்தினால் கூட நன்கு வேலை செய்வார்கள். அல்லது அனைத்து துறைகளிலும் கொரோனா தடுப்பு பணியையும் மேற்கொள்ளவும் தயாராக இருக்கின்றோம். கொரோனா தடுப்பு பணியில் ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு ஆசிரியரை நியமிக்கலாம். அவர்களுக்கு தனியாக சுத்தம் சுகாதாரம் மாணவர்களிடத்தில் கற்று தர சொல்லலாம். அவர்களுக்கு வேளாண்மை பயிற்சி அளித்து வேளாண்மை ஆசிரியராக பணியமர்த்த லாம் அல்லது நூலக ஆசிரியராகவும் பணியமர்த்தலாம். இனிமேல் ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுதுபவர்களுக்கு 90 மேல் மதிப்பெண் எடுத்தால் வேலை என அறிவியுங்கள். அப்பொழுது தான் சரியான நடைமுறை இருக்கும்
  நன்றி கண்ணீருடன்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி